41 வருட வெற்றி பயணம்…வேகமெடுக்கும் கமல்ஹாசன் ப்ரொடக்ஷன்
நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் நடனம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, படங்களை இயக்குவது போன்ற பன்முகத் தன்மை கொண்டவர்.
1981ஆம் ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எனும் படக் கம்பெனியை கமல்ஹாசன் நிறுவினார். அதில் முதல் படமாக ராஜபார்வை படத்தைத் தயாரித்தார்.
தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் படம நிறுவனம் 41 ஆவது ஆண்டு கொண்டாடுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் இதை தங்களது வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கமலின் நூறாவது படம்
களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் கமல்ஹாசன். எழுபதுகளின் முன்னணி ஹீரோவாக பேசப்பட்டு தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என அந்த காலகட்டத்திலேயே Pan India நடிகராக கொடிகட்டி பறந்தார். சினிமாவில் தனக்கான ஒரு உறுதியான இடத்தைப் பிடித்ததும், நடிகர் கமல்ஹாசன் படங்களை தயாரிக்கும் பட கம்பெனி ஒன்றை துவங்க முடிவு செய்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் கம்பெனியை 1981 ஆம் ஆண்டு நிறுவினார். அதில் முதல் படமாக தனது 100வது படமான ராஜபார்வை படத்தை தயாரித்தார். இப்படத்தை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். படம் வியாபார ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றது முதல் படமே தரமானதாக பேசப்பட்டது.

RKFI நோக்கம்
70's, 80's காலகட்டங்களில் பெரும்பாலான ஹீரோக்கள் ஒரே மாதிரியான படங்களில் நடித்து வர கமல்ஹாசன் அது போன்ற படங்களுக்கு மாற்றாக பரீட்சார்த்த படங்கள் செய்ய வேண்டும் என எண்ணினார். ஆனால் பிற பட கம்பெனிகள் அதை எப்படி ஏற்பார்கள் என யோசித்து தானே ஒரு படக் கம்பெனி ஆரம்பித்து அதில் தனக்கு பிடித்த வித்தியாசமான படங்களை பண்ண முடிவு செய்தார். கமல்ஹாசன் அன்று நினைத்தது போல ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படங்கள் பெரும்பாலும் புதிய முயற்சிகள் ஆகவே இருந்து வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட கம்பெனியில் தான் மட்டுமே நடிக்காமல் பிற நடிகர்களை வைத்தும் படங்களை தயாரித்தார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும், சதிலீலாவதி போன்ற தரமான படங்கள் அதற்கு உதாரணம்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சிறந்த படங்கள்
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட கம்பெனி தயாரித்த பல திரைப்படங்கள் தமிழ் படங்களின் தரத்தை உயர்த்தி உள்ள படங்கள ஆகவே இருக்கின்றன. ராஜபார்வையில் ஆரம்பித்து விக்ரம் ( 1986 ) கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற பல படங்கள் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்றன.

வேகமெடுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இதில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படமே. இது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படம் ஆர்யா நடிக்கும் ஒரு படம் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படமும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பட கம்பெனி ஆரம்பித்து வெற்றிகரமாக நிலைத்து நின்று நாற்பத்தி ஒன்றாவது ஆண்டு காலம் கடந்து அதே உத்வேகத்துடன் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் அதன் வெற்றியை கமல்ஹாசன் ரசிகர்கள் தங்களது வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











