»   »  நடிகர் கமல்ஹாசனை ஆட்டுவிக்கும் 'வி', ரா;'ஜ'!

நடிகர் கமல்ஹாசனை ஆட்டுவிக்கும் 'வி', ரா;'ஜ'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நேரங்களில் நம்மை நாமே கிள்ளிப் பார்ப்பது போன்ற ஆச்சரியங்கள் நடந்தேறும்... நடிகர் கமல்ஹாசன் விவகாரத்திலும் அப்படி ஒரு 'ஆச்சரியமான சுவாரசியமான வில்லங்க'த்தை நமது வாசகர்களுக்காக தருகிறோம்.. ஆமாங்க கமலுக்குப் பிடிக்காத அந்த 'வி', ரா, ஜ' என்னனு அவசியம் நீங்க தெரிஞ்சுக்குங்க..

நடிகர் கமல்ஹாசன் தம்மை முற்போக்குவாதியாக, பெரியார் பற்றாளனாக சொல்லிக் கொள்பவர். அவர் தமக்கு எந்த மதம் மீதும் நம்பிக்கை இல்லை.. சாதி மீதும் நம்பிக்கை இல்லை என்பவர். ஆனால் அவரது தேவர் மகனாக இருக்கட்டும், உன்னைப் போல் ஒருவனாகட்டும், 'வி'ஸ்வரூபமாகட்டும் வில்லங்கங்களாக வீடு கட்டி வெளுத்து வாங்குகிறது.

'வி'ஸ்வரூபம் படம்தான் வில்லங்கம் என்றில்லை. சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடித்த 'வி'க்ரம் படமும் இப்போது அரசியல் பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறது. அப்போது கமல்ஹாசனை ஒருமையில் திட்டி எம்.ஜி.ஆருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியதாக கருணாநிதி சொல்லப் போய் அவதூறு வழக்கு ரேஞ்சுக்கு ஜெயலலிதா எகிறிவிட்டார். ஆனாலும் விடாது கறுப்பு என்கிற வகையில் கருணாநிதியோ ஆதாரமெல்லாம் இருக்கிறது.. நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன் என்று சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார்.

அனேகமாக வி, ரா, ஜ பற்றிய ஒரு யூகத்துக்கு ரெடியாகி இருப்பீர்கள் அல்லவா? சஸ்பென்ஸ் நீடிக்க வேண்டியதில்லை..

"'வி'க்ரம்"- "'வி'ஸ்வரூபம்" சில ஒற்றுமைகள்- 1

கமல்ஹாசனின் 'வி'க்ரம் படம்தான் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அவரது பிரம்மாண்ட முதல் திரைப்படம். லிசி, டிம்பிள் கபாடியா, அம்பிகா நடித்த 'வி'க்ரம் படத்தின் படுதோல்வியால் கமலுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தார். இதையடுத்து தனது உழைப்பால் மீண்டும் எழுந்து நின்றார்.

தற்போதும் சுமார் ரூ. 100 கோடி செலவில், கமலின் வார்த்தைகளில் சொல்வதானால் சொத்தை அடமானம் வைத்து வட்டிக்கடைக்காரர் 2 மாதம் பொறுமையாக இருந்து கொண்டிருக்கும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக தயாரித்த படத்தின் பெயரும் ஏனோ 'வி' வரிசையில் 'வி'ஸ்வரூபமாக ஒட்டிக் கொள்கிறது.

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 2

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 2

'வி'க்ரம் படம் 1986-ம் ஆண்டு எந்த மாதத்தில் வெளியானது தெரியுமா? அட 'வி'ஸ்வரூபம் போலவே...... 'ஜ'னவரியில் தான் 'வி'க்ரம் படம் வெளியானது. 'வி'ஸ்வரூபம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. இதுமட்டும்தானா என்று கேட்கிறீர்களா?

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 3

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 3

'வி'க்ரம் படம் எதைப் பற்றியது? வெளிநாட்டு தொடர்பு, ஏவுகணை கடத்தல், எல்லை கடந்த பயங்கரவாதம், சலாமியா எனும் முஸ்லிம்கள் வாழும் தேசம், அந்த காலத்து துப்பாக்கி!

அப்புறம் 'வி'ஸ்வரூபம் மட்டும் எதைப் பற்றியது! கொஞ்சம் டெக்னிக்கலாக அப்டேட் ஆப்கானிஸ்தான் எனும் முஸ்லிம்கள் தேசம், எல்லை கடந்த பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, வான்வழித் தாக்குதல் என எல்லாமே அதே தாங்க!

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 4

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 4

'வி'க்ரம் படத்தில் கமல் ஏற்று நடித்த பாத்திரம் "RAW" அதிகாரி. வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் 'ரா' அதிகாரியாக நடித்திருப்பார். ஆமாங்க. 'வி'ஸ்வரூபம் படத்திலும் "RAW" அதிகாரி வேஷம்தானே கமலுக்கு!

ஆக 'வி'க்ரம் படத்தை 'வி'ஸ்வரூபமாக்கி ''வி'ஸ்வரூபமாக' கொடுத்திருக்கிறார் கமல்... இரண்டுமே'வி' (அடடா, என்னமா ரிசர்ச் பண்ணியிருக்கேன்!)

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 5

'வி'க்ரம்- 'வி'ஸ்வரூபம் சில ஒற்றுமைகள்- 5

'வி'க்ரம் படத்தின் சிறப்புக் காட்சியில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ள கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவராக கருணாநிதியால் சொல்லப்படுகிறவர் ஜெயலலிதா.

என்ன காலவிசித்திரம்! அதே ஜெயலலிதா இன்று அதே கமல்ஹாசனின் 'வி'ஸ்வரூபம் படத்துக்கு தடையே போட்டுவிட்டாரே!!

அந்த 'வி'க்ரம் செம ப்ளாப்... இந்த 'வி'ஸ்வரூபத்துக்கு தடை!!

அந்த 'வி'க்ரம் செம ப்ளாப்... இந்த 'வி'ஸ்வரூபத்துக்கு தடை!!

அப்படின்னா 'வி' வரிசை பெயர்கள், ரா அதிகாரி வேடம், ஜனவரி மாதம் ஆகிய மூன்றும் கமலுக்கு ஆகாத ஒன்றாகவே இருக்கிறதோ!! (ஜனவரி மாதத்தில் பிரச்சனையின்றி வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கமல் படங்களின் பட்டியலைப் போட்டு என்னை திட்ட ஆரம்பிப்பீர்களே.. ஸ்டார்ட் மியூசிக்...!)

English summary
Actor Kamalhaasan's Vikram and Vishwaroopam films met same problmes.
Please Wait while comments are loading...