இளையராஜாவின் சாதனைக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்...கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ilayaraja ராஜ்யசபா M.P-யாக நியமனம்... மகிழும் தமிழகம் *Kollywood | Filmibeat Tamil

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சேவையாற்றியவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார் என்றால் அது மிகையில்லை. அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். அவர் ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

Kamalhaasan said that President post was suitable for Ilaiyaraajas musical achievment

79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று, "இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது என மோடி தெரிவித்துள்ளார். அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கைப் பயணமும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து நிறைய சாதித்துள்ளார். அவர் ராஜ்ய சபாவுக்கு வருவதில் மகிழ்ச்சி." என பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இளையராஜாவிற்கு பாரதிராஜா, ரஜினிகாந்த் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kamalhaasan said that President post was suitable for Ilaiyaraajas musical achievment

கமல் தனது ட்விட்டரில் பதிவில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இளையாராஜாவும், கமலும் இணைந்து தியேட்டரில் கேஜிஎஃப் 2 படம் பார்த்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து கமலின் விக்ரம் படம் வெற்றி அடைந்ததற்காக அவருக்கு இளையராஜா வாழ்த்து குறி இருந்தார். இந்த வெற்றிகள் தொடர வேண்டும் என வாழ்த்தி இருந்தார்.

இந்த சமயத்தில் இளையராஜாவிற்கு ஜனாதிபதி பதவி கொடுக்க வேண்டும் என கமல் வாழ்த்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கமலின் இந்த பதவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X