Thug Life: தியேட்டரைக் கொளுத்துவோம்.. கர்நாடகாவில் தக் லைஃப்க்கு அதிகரிக்கும் மிரட்டல்.. எங்க போய் முடியுமோ

பெங்களூரு: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வரும் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சிகளுக்கே டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் புக்கிங் தொடங்கிவிட்டது. ஆனால் கர்நாடகாவில் இன்னும் புக்கிங் ஆரம்பிக்கப்படவில்லை.

கர்நாடகாவில் படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற கேள்வி இப்போது வரை உள்ளது. காரணம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து வந்ததுதான் என்று கூறினார். இதனை கன்னட அமைப்பினர் தொடங்கி, கர்நாடக அமைச்சர் , முதலமைச்சர் என பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது தக் லைஃப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

Kamalhaasan Silambarasan Thug Life Faces threats from pro-Kannada group

மன்னிப்பு கேட்க முடியாது:கமல்ஹாசனை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டும் தான் படத்தை கர்நாடகாவில் வெளியிட விடுவோம், இல்லை என்றால் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று தெரிவித்தார்கள். இந்த கருத்தை கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவரும் தெரிவித்தார். ஆனால் கமல் ஹாசன் தனது ஸ்டைலில், " அன்பின் மிகுதியால் தான் நான் அப்படி பேசினேன். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது எனவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதைத் தான் நான் கூறினேன், அதேபோல் என்னை மிரட்டி பணிய வைக்கலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம், நான் இதைவிட மோசமான மிரட்டல்களை எல்லாம் பார்த்திருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

Kamalhaasan Silambarasan Thug Life Faces threats from pro-Kannada group

தியேட்டரைக் கொளுத்துவோம்: இதனால் கர்நாடகாவில் படத்தின் டிக்கெட் புக்கிங் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இது இரு மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் வரை பேசு பொருளாக மாறி நிற்கிறது. இந்நிலையில் கன்னட ரஷன வேதிகே அமைப்பு தலைவர் நாராயண கவுடா தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, " தமிழர்களைக் கவர கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் படத்தை திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் பொது வெளியில் தியேட்டரைக் கொளுத்துவோம் என்று மிரட்டல் விட்ட இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு பேச்சு உலா வருகிறது.

தக் லைஃப் படக்குழு: இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பது போலத் தெரியவில்லை. எனவே கர்நாடகாவில் படம் வெளியாகாது என்ற மனநிலைக்கு தமிழ் திரையுலகினர் வந்துவிட்டார்கள். மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் புரோமோசன் வேலைகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X