பகத் பாசிலை பார்த்து கமல்ஹாசனே மிரண்டு விட்டார்.. நடிகர் சம்பத்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வசூலை செய்து வருகிறது விக்ரம் திரைப்படம்

கமல்ஹாசனுடன் இணைந்து பகத் பாசில்,விஜய் சேதுபதி, சூர்யா, சூர்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது

விக்ரம் பட பிடிப்பில் பகத் பாசில் நடிப்பை பார்த்து கமல்ஹாசனே மிரண்டு விட்டார் என பிரபல வில்லன் நடிகர் சம்பத் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்

கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்

கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமான வெற்றி பெற்று வருகிறது . கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில் மாநகரம் கைதி மாஸ்டர் ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் விக்ரம். நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர்

முற்றிலும் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில்

முற்றிலும் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில்

கமல்ஹாசனின் மிகத் தீவிரமான ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமல்ஹாசனை பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார். விக்ரம் படத்தின் மையக் கருவை கமல்ஹாசன் சொன்னதைத் தொடர்ந்து அதை அப்படியே மெருகேற்றி லோகேஷ் கனகராஜ் இதற்கு இருப்பார். லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் இருந்து துளி கூட மாறாமல் பக்கா லோகி படமாக விக்ரம் உருவானது. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியிருக்க கமல்ஹாசன்,பகத் பாசில்,விஜய் சேதுபதி,சூர்யா, நரேன் என அனைவரும் போட்டி போட்டு இந்த படத்தில் நடித்திருந்தது படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்தது

விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்

விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தனது அசுர நடிப்பின் மூலம் வியப்படைய வைத்து வரும் நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழ் சினிமாவிற்கு வேலைக்காரன் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பகத் பாசிலை பார்த்து கமல்ஹாசனே மிரண்டு விட்டார்

பகத் பாசிலை பார்த்து கமல்ஹாசனே மிரண்டு விட்டார்

விக்ரம் திரைப்படம் வெளியாகி உலக அளவில் 300 கோடியை தாண்டி வசூல் சாதனைகளை செய்து இன்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் பகத் பாசிலின் நடிப்பை பார்த்துவிட்டு கமல்ஹாசனை மிரண்டு போனதாக பிரபல வில்லன் நடிகர் சம்பத் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X