என்னைப் பார்க்க வந்த கமல் உன்னைப் பற்றியே பேசுகிறார்... உதயநிதியிடம் கூறிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ரெட் ஜெயிண்ட் நிறுவனம் விநியோகம் செய்வதால் கணக்கு வழக்குகள் சரியாக இருப்பதாக திரைத் துறையைச் சேர்ந்த பலரும் கூறுகின்றனர்.
இதனால் ஒவ்வொரு வாரமும் அவர் விநியோகத்தில் படம் வெளியாகிறது. சில சமயம் ஒரே வாரத்தில் இரண்டு படங்கள் வெளியிடுகிறார்.
இந்நிலையில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்போது தொடர்ந்து நடைபெறுவதற்கு முக்கிய காரணம் கமல் ஹாசன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் உதய்.

தயாரிப்பு நிறுவனம்
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ரியல் எஸ்டேட், ஸ்நோ பௌலிங் விளையாட்டு அரங்கமும் போன்ற சில வணிகங்களை நடத்தி வந்தேன். அப்பா சினிமாவிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார். அதனால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கு என்று கூறினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கச் சொல்லி அப்பா கூறினார். ஆனால் எனக்கு கில்லி படம் மிகவும் பிடிக்கும் என்பதால் தரணி மற்றும் விஜய் கூட்டணியில் குருவி திரைப்படத்தை தயாரித்தேன்.

மன்மதன் அம்பில் தவறு
அதேபோல எனக்கு கமல் சாரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது ஆசை. அப்போது தலைவன் நின்றான் என்ற ஆக்சன் கதையை என்னிடம் கூறினார். ஆனால், நான்தான் பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போன்ற நகைச்சுவை திரைப்படம் எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். அது சில காரணங்களால் சரியாக ஓடாமல் போய்விட்டது. அவர் படத்தை தயாரிக்கிறேன் என்பதைவிட அவருடன் பழகுவதையே பெரிதாக எண்ணினேன். ஆனால் எங்கள் கூட்டணி வெற்றியடையவில்லை என்ற வருத்தம் இருந்தது.

வருத்தம் போக்கிய விக்ரம்
அந்த வருத்தத்தை விக்ரம் திரைப்படத்தின் வசூல் மொத்தமாக போக்கிவிட்டது. ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன். காரணம், அனைத்து படங்களையும் அடாவடியாக நான் வாங்கி விநியோகம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அது வேண்டாம் என்று முடிவு செய்தபோது, கமல்தான் அந்த முடிவை மாற்றுங்கள் என்று எனது அப்பாவிடம் கூறினார்.

என்னைப் பற்றிய பேச்சு
அவர் கூறியதால்தான் என் நிறுவனத்தை மூடாமல் தொடர்ந்து நடத்தினேன். சமீபத்தில் கூட, விக்ரம் திரைப்படத்தை அப்பா பார்த்தபோது அவரை சந்திக்க கமல் ஹாசன் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். பின்னர் நான் வீட்டிற்கு வந்தபோது,"கமல் ஹாசன் என்னை சந்திக்க வந்துவிட்டு முழுக்க முழுக்க உன்னைப் பற்றியே பேசினார்" என்று அப்பா தன்னிடம் கூறியதாக உதயநிதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











