குழந்தையை சிரிக்க வைக்க குழந்தையாகவே மாறிய கமல்.. செல்ல குட்டிக்கு நாயகனாக மாறிய உலக நாயகன்!

சென்னை: கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தின் டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான குழந்தையை எப்படி நடிக்க வைத்தார்கள் என்று நினைத்து கொண்டிருந்த பலரின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

பல நாடுகளில் வெற்றி

பல நாடுகளில் வெற்றி

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் இப்படம் மிகுந்த அளவில் வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் வசூலையும் அள்ளியுள்ளது. கடந்த மாதம் ரிலீசான இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ, கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சண்டைக் காட்சிகள் மேக்கிங் வீடியோ போன்றவை வெளிவந்து அனைவரையும் மிரள வைத்தது.

ஃபேன் பாய் லோகேஷ்

ஃபேன் பாய் லோகேஷ்

ஒரு ஃபேன் பாயாக படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருந்தார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி 67 படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கங்கராஜ், அந்த படத்திற்கு பிறகு விக்ரம் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நடிப்பில் மிரட்டிய நடிகர்கள்

நடிப்பில் மிரட்டிய நடிகர்கள்

விக்ரம் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற அனைவரும் நடிப்பில் மிரட்டி இருக்க, இந்த படத்தில் நடித்திருந்த குழந்தையும் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த குழந்தையிடம் கமல் எவ்வாறு நடந்து கொள்வார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கக்கூடிய குழந்தை காட்சிகளை எவ்வாறு எடுத்தார்கள் என்பதை பற்றி கூறியுள்ளனர்.

ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுவாங்க

ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுவாங்க

குழந்தையை பேர் சொல்லிக் கூப்பிட்டவுடன் திரும்புவதற்கும், குழந்தையை சிரிக்க வைப்பதற்கும் கமலும் பகத் பாசிலும் டான்ஸ் ஆடுவார்கள் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது குழந்தை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் கமல் நின்று கையசைப்பார், டான்ஸ் ஆடுவார், குழந்தைக்கு பிடித்த பாடல்களைப் பாடுவார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். விக்ரம் என்று கூப்பிட்டவுடன் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கமலுடன் இந்த குழந்தை ஒன்றிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

விதை போட்ட கமல்

விதை போட்ட கமல்

குழந்தையை எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்று கமலுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளனர். கமல் மேல் சாய்ந்து பால் குடிப்பதும், தூங்குவதும் என்று பல முக்கியமான காட்சிகள் படத்தில் உண்டு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் குட்டி குழந்தையை எப்படி நடிக்க வைத்திருப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த குட்டி குழந்தையின் நடிப்புக்கும் விதை போட்டுள்ளார் கமல் என்ற தகவல் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X