மிஸ் பண்ணீடாதீங்க! மஞ்சுமெல் பாய்ஸ்க்கு பின் கமல்ஹாசன் பாராட்டிய மலையாளப் படம் எது தெரியுமா?

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் என்றாலே திரை உலகில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தோன்றக்கூடிய விஷயமாக இருப்பது கமல்ஹாசன் ஒரு நடமாடும் சினிமா என்சைக்கிளோபீடியா என்பதுதான். உள்ளூர் சினிமா தொடங்கி உலக சினிமா வரை அனைத்து சினிமாக்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருப்பது மட்டும் இல்லாமல் அதில் கைதேர்ந்தவராக இருக்க கூடிய நபர்கள் யார் யார் என இந்திய சினிமா உலகில் இருப்பவர்களை பட்டியலிட்டால் இதில் கமல்ஹாசன் பெயர் முதல் இடத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

எண்பதுகள் மற்றும் 90களில் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் தொடங்கி ஹாலிவுட் படங்களில் பின்பற்றப்பட்ட தொழில்நுட்பங்கள் வரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன் தான். இதனை இன்றைக்கும் செய்து வருகிறார். கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே சினிமா ரசிகர்கள் அந்த படத்தின் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசனின் கதைத் தேர்வு மற்றும் அந்தக் கதையில் அவரது கதாபாத்திரம்தான். ஒரு கதாபாத்திரத்திற்காக கமல்ஹாசனின் மெனக்கெடல்கள் ரசிகர்கள் மத்தியிலும் சரி, சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வோடு இருக்கக்கூடிய இளம் கலைஞர்கள் மத்தியிலும் சரி, ஒரு உத்வேகத்தை கொடுக்கும் அளவிற்கு தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவார் கமல்ஹாசன்.

Kamalhaasan Indian 2

மஞ்சுமெல் பாய்ஸ்: அப்படியான நிலையில் கமலஹாசன் ஒரு படத்தை பாராட்டுகிறார் என்றால் அந்தப் படத்தின் கதை திரைக்கதை, நடிப்பு, பின்னணி இசை என அனைத்தும் மிகச் சரியாக இருந்தால் மட்டுமே கமல்ஹாசன் பாராட்டுவார். கமல்ஹாசனின் குணா படத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய குணா குகையை மையப்படுத்தி அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் தமிழில் சக்கை போடு போட்டது. மட்டும் இல்லாமல் மலையாளத்தில் ரூபாய் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்து. இந்தப் படத்துக்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பு விடவும் தமிழ்நாட்டில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது. இந்தப் பட குழுவினரை கமல்ஹாசன் நேரில் அழைத்து அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து அவர்களைப் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan Indian 2

தலைவன்: இந்நிலையில் கடந்த மே மாதம் மலையாளத்தில் வெளியான தலவன் அதாவது தலைவன் என்ற படத்தினை பார்த்து படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். தலைவன் திரைப்படம் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் ஆன ஜிஸ் ஜாய் இயக்கத்தில் உருவானது. மேலும் இந்த படத்தில் பிஜ்ஜு மேனனும் ஆசிப் அலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். போலீஸ் விசாரணையை மையப்படுத்திய இந்தப் படத்தில் திரைக்கதை மிகச் சிறப்பாக இருந்தால் இந்தப் படம் கேரளாவில் ஹிட்டானது.இந்தப் படக்குழுவினரோடு அமர்ந்து தலைவன் படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படம் இன்னும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan Indian 2

கமல்ஹாசன் திரை விருந்து: கமல்ஹாசன் நடிப்பில் இந்த மாதம் 27ஆம் தேதி கல்கி 2898 ஏ.டி படமும் அடுத்த மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கல்கி 28 98 ஏடி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.

Kamalhaasan Indian 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X