இசைக்கு இளைஞர் இளையராஜா… என் மனதுக்கு கிளைஞர்… பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் !
சென்னை : இசையின் நாயகன் இளையராஜா இன்று தனது 78 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரைப்பிரபலங்கள், அவரது ரசிகர்கள் இணையத்தில் வாயிலாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசை பயணம்
அன்னக்கிளியில் மச்சான பாத்தீங்களா என்று ஆரம்பித்த இவரது இசை பயணம் தொடர்ந்து வீருநடை போட்டுக்கொண்டே உள்ளது. இவரது இசை மழையில் நனைந்து லாபிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல இளைஞர்களின் இரவுகளை வண்ணமயமாக்கிய பெருமை இவரது இசைக்கு உண்டு.

உணர்ச்சி பெருக்கு
மகிழ்ச்சியா... அழகையா... அத்தனையையும் தன் இசையால் நம் கண் முன் நிறுத்தி காதுகளை குளிர்விப்பார் இளையராஜா. அதற்கு உதாரணமாக நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலில் அத்தனை அழுத்தத்தையும் வெளிப்படுத்தி இருப்பார். இந்த பாடலை எப்போது கேட்டாலும் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் பீச்சிட்டு வரும்.

இசைக்கே ஞானி
இசையையோ... இளையராஜாவையோக தனித்தனியா பிரித்து பேசி விட முடியாது. அதனால் தான் இசைக்கே ஞானி என்று அழைத்து வருகிறோம். இசைக்கு மொழி கிடையாது இசை என்பது ஒரு ஓசை என்பதை இளையராஜாவின் பல பாடல்கள் மெய்ப்பித்துள்ளன.

இசை சுரங்கம்
இளையராஜா தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை சுரங்கம். இன்று இவர் தனது 78 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசைக்கு இளைஞர்
இசைக்கு இளைஞர் இளையராஜா, என் மனதுக்கு கிளைஞர், உணர்வுகளின் உறவாய் இருப்பவர் சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழி பெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இசைக்கு கவிதையால் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் கமலஹாசன்.


Click it and Unblock the Notifications











