Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மறுபடியும் உங்கள் நான்.. கமல் போட்ட ட்வீட்.. வேற லெவலில் டிரெண்டாகும் #KamalHaasan232
சென்னை: உலக நாயகன் ரசிகர்களின் உள்ளங்கையில் உள்ள செல்போன்களில் எல்லாம் இப்போ விஸ்வரூபம் படத்தில் வரும் "எவனென்று நினைத்தாய்.. எதைக் கண்டு சிரித்தாய்" பாடல் ஒலிக்கிறதோ இல்லையோ.. கமல்ஹாசனின் 232வது படத்தின் டைட்டிலை கேட்ட உடனே நிச்சயம் அனைவரது வாயும் அந்த பாடலை முணுமுணுக்க தொடங்கி இருக்கும்.
Recommended Video
லோகேஷ் கனகராஜின் ஆண்டவருக்கு நன்றி ட்வீட்டை தொடர்ந்து, கமல்ஹாசன் போட்ட மறுபடியும் உங்கள் நான் ட்வீட் வேற லெவலில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பெண்களுக்கான புதிய டிஜிட்டல் பத்திரிக்கை ... தூரிகை கபிலனுக்கு குவியும் வாழ்த்துக்கள் !
மறுபடியும் உங்கள் நான்
மற்றுமொரு தொடக்கம் ஆரம்பம் என்றும், மறுபடியும் உங்கள் நான் என நடிகர் கமல்ஹாசன் ‘எவனென்று நினைத்தாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்து போட்ட ட்வீட்டை ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் ஷேர் செய்து, தங்களின் எதிர்பார்ப்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ராக்ஸ்டார் ஹேப்பி
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து உலக நாயகன் உடன் இணைந்து எவனென்று நினைத்தாய் படத்திற்கும் இசையமைக்கப் போவது நம்ம ராக்ஸ்டார் அனிருத் தான். அதே போல மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் வொர்க் பண்ணுவதில் ரொம்ப சந்தோஷம் என தெரிவித்துள்ளார் அனிருத்.
ரசிகனின் மிகப்பெரிய சாதனை
மாஸ்டர் அப்டேட் விடாமல் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுறீங்களே என ரசிகர்கள் சார்பாக லோகேஷ் கனகராஜ் உடன் செல்லமாக சண்டை போட்ட நம்ம ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், ஒரு ரசிகனின் மிகப்பெரிய சாதனை என்றும், வாழ்த்துக்கள் மச்சி.. எண்ணம் போல் வாழ்க்கை என்றும் வாழ்த்தி தள்ளி உள்ளார். அந்த புராஜெக்ட்டுக்கும் நீங்க அப்டேட் தருவீங்களா பாஸ்!
பார்த்திபன் பாராட்டு
#KamalHaasan232 என்ற ஹாஷ்டேக் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் Congratulations என பாராட்டி உள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கமல்ஹாசனின் 232வது படத்திற்கு தங்களது எதிர்பார்ப்புகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மிகப்பெரிய வாய்ப்பு
மூன்று படங்களை மட்டுமே இயக்கி உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 4வது படமே கமலை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பதை அறிந்த திரையுலகினர் அந்த திறமையான இளம் இயக்குநரை வாழ்த்தி வருகின்றனர். சும்மாவே தனது படங்களில் கமல் ரெஃபரன்ஸ் இருக்கும், கமலை வைத்தே படம் இயக்குகிறார் என்றால் மனுஷன் என்ன பண்ணப் போகிறாரோ என எக்ஸ்பெக்டேஷன்ஸ் எகிறுகிறது.
அப்போ இந்தியன் 2?
அடுத்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக உள்ள கமல்ஹாசன், கூடவே எவனென்று நினைத்தாய் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்றும், இந்தியன் 2வுக்கு முன்பே இந்த படம் வெளியாக உள்ளது குறித்தும் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.