ஆண்டவருக்கே அல்வா கொடுத்தது யாருடா?.. திடீரென வெளியான அறிக்கை.. இப்படியெல்லாமா சம்பாதிக்கிறாங்க?

சென்னை: சினிமா திரையுலகில் நடிகர் அல்லது நடிகைகள் பெயரில் மோசடி நடப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், திரை பிரபலங்களுக்கு அவப்பெயர் கிடைக்கிறது. பலமுறை எச்சரித்தும் ரசிகர்கள் காது காெடுத்தும் கேட்பதும் இல்லை. இந்நிலையில், தமிழ் சினிமாவின் கடவுள் என போற்றப்படும் ஒரு நடிகரின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில், ரசிகர்களை கவனமாக இருக்கவும் அவர் எச்சரித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் கமல்ஹாசன். இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தில் விருமாண்டி, மகளிர் மட்டும், சத்யா, அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, குருதிப்புனல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தை தயாரித்திருந்தார். இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிக்கும் தக்லைஃப் படத்தையும் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. முன்னதாக சிம்பு நடிக்க இருந்த 50ஆவது படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. அப்படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் இதிலிருந்து விலகியது. பின்னர் சிம்புவே இப்படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.

kamalhasan-raaj-kamal-films-warning-notice

அறிவிப்பு: இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் சமூகவலைதளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எந்த வகையிலும் உங்களை வந்தடைந்தால் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா எவனோ ஒருத்தன் ஆண்டவருக்கே விபூதி பூசியிருக்கான். அது இப்பதான் தெரியவந்திருக்கிறது என கமெண்ட் அடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. சினிமா வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், பட தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் நடக்கும் மோசடிகள் ஏராளம்.

kamalhasan-raaj-kamal-films-warning-notice

முன்னதாக பிரபல நடிகை அனுஷ்கா பெயரில் நடந்த மோசடி சம்பவம் தெலுங்கு திரையுலகையே மிரள வைத்தது. எல்லா ரெட்டி என்பவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் ரு.50 லட்சம் பெற்றுகொண்டு அனுஷ்காவை நடிக்க வைக்க வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், கடைசி வரை இந்த விவரம் அனுஷ்காவிற்கு தெரியவில்லை. அதேபோன்று இசையமைப்பாளர் மணிசர்மா பெயரிலும் அந்த நபர் விபூதி அடித்திருக்கிறார். சமீபத்தில், நடிகர் பெயரில் ஒரு மெகா மோசடி நடந்தது. பின்பு அதற்கு அந்த பிரபல நடிகரும் அறிக்கை வெளியிட்டார். ஆனால், கடைசி வரை தனது பெயரை வெளியே வராத வண்ணம் பார்த்துகொண்டார். ஆனால், இப்போது சினிமா கற்றுத்தரும் கடவுளிடமே மோசடி நபர்கள் வேலையை காட்டியிருப்பதாக நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் அடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X