தமிழ் பேச வரும் திரிஷ்யம்- கமல்ஹாசன் நடிப்பு வண்ணத்தில்: அமர்க்களமான பூஜை!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில், புதியதொரு திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கான பூஜை சிறப்பாக போடப்பட்டு தொடங்கியுள்ளனர்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படம்தான் இந்த புதிய கமல் படம். தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர்.

ஒயிட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ் குமார் தியியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் இணைந்து இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறார்கள்.

மோகன்லால் - மீனா நடிப்பில்:

மோகன்லால் - மீனா நடிப்பில்:

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்து வெளியான த்ரிஷ்யம் படம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமன்றி வசூலில் சக்கைபோடு போட்டது.

கன்னடத்திலும், தெலுங்கிலும்:

கன்னடத்திலும், தெலுங்கிலும்:

நல்ல கதையம்சமும், தெளிவான திரைக்கதையும் இருந்ததால் கன்னடத்திலும் தெலுங்கிலும் தயாராகி, வெளியாகி நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் - ரவிச்சந்திரன் நடிப்பில்:

கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் - ரவிச்சந்திரன் நடிப்பில்:

இந்தப் படத்தின் கன்னடப் பதிப்பில் ரவிச்சந்திரன் நடித்தார். பி.வாசு இயக்கினார். படம் அங்கு பெரும் ஹிட். பல வருடங்களுக்குப் பிறகு ரவிச்சந்திரனுக்குக் கிடைத்த ஹிட் படமாக இது அமைந்தது.

தமிழில் உலகநாயகன் கமல்:

தமிழில் உலகநாயகன் கமல்:

தற்போது த்ரிஷ்யம் படத்தின் தமிழ் பதிப்பில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

கதை திரைக்கதை இயக்கம்:

கதை திரைக்கதை இயக்கம்:

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜீத்து ஜோசப் கவனிக்கிறார். வசனம் - எழுத்தாளர் ஜெயமோகன்.

ஒளிப்பதிவுக்கு, ஜிப்ரான் மற்றும் பாடல் வரிகளைப் புனைகிறார் நா.முத்துக்குமார்.

ஸ்ரீப்ரியா தயாரிப்பில்:

ஸ்ரீப்ரியா தயாரிப்பில்:

ஒயிட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பயஸ், ராஜ் குமார் தியியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீப்ரியா ராஜ்குமார் ஆகியோர் இதை இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு:

ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு:

இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது. வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படபடிப்பு தொடங்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X