மகாத்மாக்களை நாடாளுமன்றத்தில் தேடாதீர்கள்... அங்கு இருப்பது தவளைகள் : கமல்ஹாசன்

தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பழைய கிணற்றில் உள்ள தவளைகள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

அரசியல்வாதிகள் பழைய கிணற்றில் உள்ள தவளைகள்: கமல்-வீடியோ

சென்னை: தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பழைய கிணற்றில் உள்ள தவளைகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகன் மக்கள் நீதி மய்யத்திற்காக "இது நம்மவர் படை" எனும் பெயரில் பாடல் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் 6 பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பை, நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் "மக்கள் நீதி மய்யம்" கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் "மக்கள் நீதி மய்யம்"இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மாற்றத்தை நோக்கி:

மாற்றத்தை நோக்கி:

அப்போது விழா மேடையில் கமல் பேசியதாவது, "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும்.

அனுமதி வாங்கிய பேனர்கள்:

அனுமதி வாங்கிய பேனர்கள்:

வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் பேனர்கள் வைப்பது மக்களுக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடும். எனவே அவற்றை உடனடியாக எடுக்கவும் சொல்லி இருக்கிறேன். பின்னர் தான் அவையாவும் முறையாக அனுமதி வாங்கி சட்டத்தின் படி வைக்கப்பட்ட பேனர்கள் எனத் தெரியவந்தது. இருந்தாலும், ஒட்டுகின்ற போஸ்டர்கள் மூலமாக எங்களை உங்களுக்கு தெரியக்கூடாது, எங்களின் செயல்பாடுகளின் மூலமாகவே உங்களுக்கு நாங்கள் தெரியவேண்டும் என விரும்புகிறேன்.

கதர் நூல்:

கதர் நூல்:

ஒற்றை நூலைக்கூட (பூணூல்) எனது பெற்றோர்களிடம் வேண்டாம் என்று சொன்னவன் நான். ஆனால் இங்கு வந்த காந்தியவாதி கருப்பையா அணிவித்த கற்றை நூலை பெருமையுடன் அணிந்து கொள்கிறேன். காரணம், இந்த கதர் நூல் தான் வெள்ளையனை பொட்டலம் கட்டி அனுப்பியது. தனித்தனியாக கிடந்த இந்தியாவை தைக்க உதவிய நூல் அது.

தலைவர்கள் தேவை:

தலைவர்கள் தேவை:

மக்கள் மகாத்மாக்களை நாடாளுமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பழைய கிணற்றில் தவளைகள் தான் இருக்கின்றது. உங்கள் தெருக்களில், உங்களைச் சுற்றித் தேடுங்கள் மகாத்மா கிடைப்பார். அப்படி தனித்தனியாக இருக்கிற அவர்கள் எல்லோருமே மக்கள் நீதி மய்யம் தான். காரணம், நாங்கள் தொண்டர்களை உருவாக்க விரும்பவில்லை, தலைவர்களை உருவாக்க ஆசைப்படுகிறோம்.

விதை:

விதை:

இந்த தமிழகத்தின் கறை என்பது இன்றோ, நேற்றோ உண்டானதில்லை. அது அரை நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட கறை. அவை அனைத்தையும் துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் இருக்கிறது. அதைத் தாண்டி மேலும் 50 ஆண்டுகள் மக்கள் நீதி மய்யம் நிலைத்திருக்கும். ஏனெனில் அதற்கான விதை நாம் அனைவரும் சேர்ந்து போட்டது" என அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X