என்னைப் பார்த்து லவ் யூ சொன்ன ஒரே ஆள்.. தக் லைஃப் விழாவில் த்ரிஷா, அபிராமிக்கு தக் லைஃப் கொடுத்த கமல்
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல் ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோல் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்று அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தக் லைஃப் படம், கமல்ஹாசனின் 234 வது படம். இந்த படத்தின் முதற்கட்ட அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் படத்திற்கு பின்னர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமல் ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்றதும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.

கமல் ஹாசனின் தோற்றத்தில் இருந்து, இந்த படத்திற்காக உடல் எடையை பெருமளவு குறைத்து, புதிய லுக்கிற்கு சென்ற சிம்பு வரை அனைவரது லுக்கும் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்யும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐ லவ் யூ: அவர் பேசும்போது, " இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தில் பேசுகிறேன். அது தமிழனின் எதார்த்தம் எனக் கூறி பேசத் தொடங்கினார். இந்த படத்தில் இரண்டு நடிகைகள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஒருநாளும் எனக்கு ஐ லவ் யூ எனக் கூறியது இல்லை. ஜோஜு ஜார்ஜ் என்னை படப்பிடிப்புத் தளத்தில் எப்போது எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் கூட சொல்ல மாட்டார். எங்கு பார்த்தாலும் கமல் சார் ஐ லவ் யூ சார் என்றுதான் கூறுவார்.

அசோக் செல்வன்: நடிகைகள் இருவரும் ( த்ரிஷா மற்றும் அபிராமி) எனக்கு லவ் யூ சொல்ல வில்லை என்றால் என்ன. போனா போகுது, நமக்கு நம்ம ஆள் இருக்கிறார்( ஜோஜு ஜார்ஜ்) என நான் மனதைத் தேற்றிக் கொள்வேன். அசோக் செல்வன் கூறும் போது ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறினார். அவர் பேசும்போது எனது ஆரம்ப காலம் நினைவுக்கு வந்துவிட்டது. பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் நடிக்க வேண்டும். ஒரு டயலாக் சொல்வதற்கு முன்னர் எச்சில் விழுங்க வேண்டுமா? டயலாக் சொல்லி முடித்த பின்னர் எச்சில் விழுங்க வேண்டுமா என்பதில் இருந்து எனக்கான சந்தேகம் தொடங்கும். ஒரு நடிகர் மற்ற நடிகர்களை பார்த்து மலைத்துப் போகக் கூடாது. அந்த காலம் வேறு இந்த காலம் வேறு என்ற புரிதல் இருந்தாலே போதுமானது" என அசோக் செல்வனைப் பாராட்டினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











