அடேங்கப்பா...அடுத்தடுத்த கமிட்மென்ட்...லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கலக்கும் உலக நாயகன்

சென்னை : தனது 50 ஆண்டு கால திரைப் பயணத்தில் முதல் முறையாக கமல் பிரேக் எடுத்துள்ளது கடந்த 4 ஆண்டுகளில் தான். அரசியல் கமிட்மென்ட்கள் காரணமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வந்தார் கமல்.

அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. 2020 ல் துவங்கப்பட்ட இந்தியன் 2 படமும் வழக்கு, விவகாரம் என இரண்டு ஆண்டுகளாக தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தல் வேலைகளில் பிஸியானார் கமல். ஆனால் அதிலும் தோல்வியையே சந்தித்தார்.

நடிப்பில் தீவிரம்

நடிப்பில் தீவிரம்

இதனால் மீண்டும் சினிமாவிற்கு திரும்பி, முழு மூச்சாக நடிப்பில் கவனம் செலுத்த இறங்கி விட்டார் கமல். தேர்தலை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க வந்து விட்டார். இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விரைவில் இந்தியன் 2

விரைவில் இந்தியன் 2

அதே சமயம் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. சமீபத்தில் லைகா உரிமையாளர் சுபாஸ்கரன் அழைப்பின் பேரில் அவரை டைரக்டர் ஷங்கர் சந்தித்த போது இந்தியன் 2 விவகாரம் தொடர்பாக பேசி, முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில மாதங்களில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்புகள் துவங்கப்பட உள்ளன.

Recommended Video

Bigg Boss Tamil season 5 ல இவங்கதான் Contestants ஆ | Kamal Hassan
அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

மற்றொரு புறம் மகேஷ் நாராயணன் இயக்கும் தேவர் மகன் படத்தின் ஷுட்டிங்கையும் கமல் துவக்க உள்ளார். விஜய் சேதுபதி, விக்ரம் நடிக்கும் இந்த படத்திற்கு கமலே கதை, திரைக்கதை எழுதி வருகிறார். அதைத் தொடர்ந்து பாபநாசம் 2 படத்தின் வேலைகளையும் துவங்க திட்டமிட்டுள்ளார் கமல்.

பிக்பாஸ் வேற இருக்கு

பிக்பாஸ் வேற இருக்கு

இதற்கிடையில் விஜய் டிவி.,யில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ரியாலிட்டி ஷோ அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் நிறைவடையும். அதுவரை வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோட்களின் ஷுட்டிங் நடக்க உள்ளது.

மிரட்டும் கமலின் கமிட்மென்ட்

மிரட்டும் கமலின் கமிட்மென்ட்

ஒரே சமயத்தில் இத்தனை கமிட்மென்ட்டா என ஏற்கனவே ரசிகர்கள் தலைசுற்றி போய் உள்ளனர். இத்தனையையும் கமல் எப்படி சமாளிக்க போகிறார் என பிரம்மிப்புடனும், குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் டோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் கமலை சமீபத்தில் சந்தித்துள்ளனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் சந்திப்பு

தெலுங்கு தயாரிப்பாளர் சந்திப்பு

சுனில் நரங், நாராயண் தாஸ் நரங், பரத் நரங், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் கமலை சந்தித்து பேசி உள்ளனர். கமலை வைத்து ஒரே நேரத்தில் பல மொழிகளில் பான் இந்தியன் படம் ஒன்றை தயாரிப்பது தொடர்பாக தான் இவர்கள் கமலுடன் பேசியதாக சொல்லப்படுகிறது.

பான் இந்தியன் படத்தில் கமல்

பான் இந்தியன் படத்தில் கமல்

நீண்ட நேரம் நடந்த இந்த ஆலோசனைக்கு பிறகு நல்ல முடிவு எட்டப்பட்டதாம். விரைவில் மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் விரைவில் டைரக்டர் சேகர் காமுலா தனுஷை வைத்து இயக்கும் தெலுங்கு படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளதாம். இதுவும் பான் இந்தியன் மூவி தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X