நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே?

By

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை, நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம், கடந்த 9 ஆம் தேதி வெளியானது. இதில் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.

லைகா தயாரித்த இந்தப் படத்தை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

குஷ்பு, மீனா

குஷ்பு, மீனா

இதில், நடிகர் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். விவேகா பாடல்கள் எழுதுகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது.

கே.வி.ஆனந்த் மறுப்பு

கே.வி.ஆனந்த் மறுப்பு

அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது. அந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு செய்திகள் முன் வெளியாயின. ஆனால், இதை இயக்குனர் கே.வி.ஆனந்த் மறுத்தார். தாணுவும் மறுத்திருந்தார்.

மன்னவன்

மன்னவன்

இந்நிலையில் ரஜினிகாந்தின் 168-வது பட டைட்டில் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தலைப்பு வைரலானது. மன்னவன் என்ற அந்த டைட்டிலைத்தான் படத்துக்கு வைத்துள்ளதாக ரசிகர்கள் தெரித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறிவருகின்றனர். இதற்கிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், இதை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் லேட்டஸ்ட் செய்திகள் கூறுகின்றன.

கமல் தயாரிக்கிறார்

கமல் தயாரிக்கிறார்

லோகேஷ், இப்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பதற்காக, கதை சொன்னதாகவும் கதையை கேட்ட கமல், இந்தக் கதை ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கேட்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. கதையை கேட்ட ரஜினிகாந்த் நடிக்க சம்மதித்துவிட்டாராம். இந்நிலையில் இந்தக் கதையை கமல்ஹாசனே தயாரிக்கிறார் என்றும் ஜூன் மாதம் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X