'நக்கலைட்ஸ்' டீம் மிரட்டுவாங்களாமே.. 'கயல்' ஆனந்தியின் கமலி ஃபிரம் நடுகாவேரி 19-ல் ரிலீஸ்!

By

சென்னை: கயல் ஆனந்தி நடித்துள்ள கமலி ஃபிரம் நடுகாவேரி அடம் வரும் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

நடிகை ஆனந்தி நடிக்கும் படம், 'கமலி ஃபிரம் நடுக்காவேரி'. இதில் புதுமுகம் ரோஹித் செராப் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பெண்ணின் மன உறுதி

பெண்ணின் மன உறுதி

தீனதயாளன் இசை அமைக்கிறார். ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்கிறார். அபுண்டு ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ராஜசேகர் துரைசாமி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, இது ஒரு பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் படம். பலவித பரிமாணங்களில் கயல் ஆனந்தி நடிக்கிறார்' என்றார்.

சமூகத்தில் பெண்கள்

சமூகத்தில் பெண்கள்

படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது: இது எனது முதல்படம். நான் வாழ்வில் சந்தித்த விஷயங்களை திரைக்கதையாக மாற்றினேன். இந்தப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்படும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான் கதை.

அக்கறை காட்டுவதில்லை

அக்கறை காட்டுவதில்லை

கிராமத்தில் இருந்துவந்து ஐஐடி-குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் படம் பயணிக்கும். இப்போதும் கிராமபுறங்களில் பென்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

முழுமை ஆற்றல்

முழுமை ஆற்றல்

அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை அதை வெளிக் கொண்டுவரும் படைப்பாக இது இருக்கும். இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி

என் கதைக்கான பொருத்தமான நடிகையை தேடியபோது கயல் ஆனந்தி சரியானவராக தோன்றினார். அவர் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. இந்தப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். கோவை நக்கலைட்ஸ் சேனலின் ஸ்ரீஜா தோழியாக நடித்துள்ளார்.

நக்கலைட்ஸ் குழு

நக்கலைட்ஸ் குழு

நக்கலைட்ஸ் குழுவைச் சேர்ந்த ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பகுதியை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். வரும் 19 ஆம் தேதி மஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் படம் வெளியாகிறது. இவ்வாறு கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X