கமலி ப்ரம் நடுக்காவேரி படம் 19ம் தேதி முதல் ஓடிடியில் வெளியீடு

சென்னை : நடிகை ஆனந்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான படம் கமலி ப்ரம் நடுக்காவேரி.

சிறப்பான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வரும் 19ம் தேதி முதல் ZEE5 ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடியில் படிக்க விரும்பும் பெண்

ஐஐடியில் படிக்க விரும்பும் பெண்

தஞ்சையின் நடுக்காவேரி கிராமத்தின் சராசரி பெண், சென்னை ஐஐடியில் படிக்க விரும்பி அதற்கான தடைகளை தகர்த்தெறியும் கதைக்கருவை கொண்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான படம் கமலி ப்ரம் நடுக்காவேரி. நடிகை ஆனந்தியின் சிறப்பான நடிப்பில் வெளியான இந்த படம் அவருக்கும் படக்குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

அடையாளத்தை தேடும் பெண்

அடையாளத்தை தேடும் பெண்

அப்பாவி பெண்ணான கமலி கேரக்டரில் வாழ்ந்திருந்தார் நடிகை ஆனந்தி. ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவுடை நம்பி கேரக்டரில் நடித்திருந்த பிரதாப் போத்தன் கேரக்டரும் கதைக்கு சிறப்பை சேர்த்தது. காதலுக்காக தன்னுடைய தகுதியை வளர்த்துக் கொள்ளும் கமலி, காதலையும் தன்னுடைய அடையாளத்தையும் எவ்வாறு அமைத்துக் கொள்கிறார் என்பதாக கதை செல்கிறது.

19ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் வரும் 19ம் தேதி முதல் வெளியாக உள்ளதாக தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அபந்து ஸ்டூடியோஸ், தியேட்டரில் காண தவறியவர்கள் ZEE5 OTT தளத்தில் வரும் 19ம் தேதி முதல் கண்டு களிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ZEE Tamil கேப்ஷன்

ZEE Tamil கேப்ஷன்

இந்த தகவலை ZEE Tamil தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கனவை தேடி வெற்றியை பார்க்க போகும் ஒரு பெண்ணின் சக்சஸ் கதை என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளது. மேலும் திரைப்படத்தின் போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. வரும் 19ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாக உள்ள தகவலையும் பகிர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X