ஆர்யா, கெளதம் மேனன் பாராட்டு மழையில்.. கயல் ஆனந்தியின் கமலி From நடுக்காவேரி டீசர் ரிலீஸ்!

சென்னை: கயல் படத்தில் அறிமுகமான நடிகை ஆனந்தி நடிப்பில், உருவாகி உள்ள கமலி From நடுக்காவேரி படத்தின் டீசர் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் நடிகர் ஆர்யா இந்த டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

கயல் ஆனந்தி, இமான் அண்ணாச்சி, பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகி உள்ள கமலி From நடுக்காவேரி படத்தை ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார்.

Kamali from Nadukkaveri teaser released!

வரும் ஏப்ரல் 17ம் தேதி கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் திரைக்கு வருகிறது.

கயல் ஆனந்தி என்கிற பெயர், இந்த படத்திற்கு பிறகு, கமலி ஆனந்தியாக மாறினாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கு ஒண்ணுமில்லை.

கயல், விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல தரமான படங்களில் இயல்பாக நடித்து வரும் ஆனந்தி, வெகு விரைவிலேயே ஹீரோயின் சென்ட்ரிக் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நடித்துள்ளார்.

Kamali from Nadukkaveri teaser released!

எவ்வளவு நேரம் படிக்கிறோங்கறது முக்கியம் இல்லை.. எப்படி படிக்கிறோங்கறது தான் முக்கியம் என பிரதாப் போத்தன் கூறும் வசனங்கள் தான் இந்த படத்தின் கருவாக அமைந்திருக்கிறது.

கிராமப்புற பெண்கள் நன்றாக படிக்கும் திறமை பெற்றிருந்தாலும், ஆங்கிலம் பேச முடியாத சூழ்நிலையில், அவர்கள் அசிங்கப்பட நேரிடும் சூழல்கள் உருவாகி வருவதை டீசரிலேயே இயக்குநர் எடுத்துக் காட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X