Kamal: ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்... செகண்ட் இன்னிங்ஸில் கல்லா கட்டும் கமலின் வேட்டையாடு விளையாடு!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கமல் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும்விதமாக வேட்டையாடு விளையாடு திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸானது.

ஆனால், வேட்டையாடு விளையாடு படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதோடு வசூலிலும் மாஸ் காட்டி வருகிறதாம்.

 Kamals Re-release of Vettaiyaadu Vilaiyaadu Getting a huge response from fans

பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் வேட்டையாடு விளையாடு: கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் கிரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 90ஸ் கிட்ஸ்களை கடந்து 2கே கிட்ஸ்களையும் வசீகரித்து வருகிறார் கமல்ஹாசன். விரைவில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருப்பதால், கமல் குறித்த 2கே ரசிகர்களின் தேடல் அதிகமாகியுள்ளது.

இதனால், அவர்களுக்கு தரமான ட்ரீட் கொடுக்கும்விதமாக வேட்டையாடு விளையாடு படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. முற்றிலும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட தரமான குவாலிட்டியில் இப்படத்தை ரீகிரியேட் செய்துள்ளனர். டால்பி அட்மாஸ் சவுண்ட் உட்பட அனைத்தும் கமல் ரசிகர்களுக்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வெளியான வேட்டையாடு விளையாடு படத்திற்கு செம்மையான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

2006ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். போலீஸ் ஸ்டோரி படங்கள் எடுப்பதில் ஸ்பெஷலிஷ்ட்டான கெளதம், முதன்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்தார். அப்படி உருவானது தான் வேட்டையாடு விளையாடு. கமலுடன் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

 Kamals Re-release of Vettaiyaadu Vilaiyaadu Getting a huge response from fans

இன்னொரு பக்கம் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ராகவன் ஐபிஎஸ் கேரக்டரில் செம்ம கெத்து காட்டினார் கமல். அட்டகாசமான ஆக்‌ஷன் சீக்வென்ஸ், பரபரக்கும் திரில்லர் திரைக்கதை, மிரட்டலான மேக்கிங், ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் மாஸ் பிஜிஎம் என இந்தப் படம் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக ராகவன் கேரக்டரில் கமல் என்ட்ரியாகும் சீன் மரண மாஸ்ஸாக இருந்தது.

கமல் ரசிகர்களுக்கான பேன் பாய் சம்பவமாக ரிலீஸான வேட்டையாடு விளையாடு நேற்று மீண்டும் வெளியானது. சமீபத்தில் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாகி தோல்வியை தழுவியது. ஆனால், கமலின் வேட்டையாடு விளையாடு பாக்ஸ் ஆபிஸில் வெறித்தனமாக கல்லா கட்டி வருகிறதாம். நேற்று மட்டும் தமிழில் 5 படங்கள் வெளியான நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள வேட்டையாடு விளையாடு தான் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வருகிறதாம்.

 Kamals Re-release of Vettaiyaadu Vilaiyaadu Getting a huge response from fans

அதன்படி, இந்தப் படம் நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் இன்றும் வேட்டையாடு விளையாடு படத்தின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக திரையிடப்படுகிறதாம். இதனால், இன்றும் வேட்டையாடு விளையாடு திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 என சொல்லப்படுகிறது. முன்னதாக 2006ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் மொத்த பட்ஜெட் 24 கோடி என்றும், பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X