Kamal Salary: கமலுக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸுக்காக சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி!

சென்னை: விஜய் டிவியின் சக்சஸ்ஃபுல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வரை ஒளிபரப்பாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து விரைவில் பிக் பாஸ் 7வது சீசன் தொடங்கவுள்ளது.

இந்த சீசனுக்காக கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Kamals salary for Bigg Boss season 7 is 150 crore rupees

பிக் பாஸ் சீசன் 7க்கு கமல் வாங்கிய சம்பளம்: ஹாலிவுட் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் விஜய் டிவி தயாரிக்கும் இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் 7வது சீசன் தொடங்கவுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6ல், சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வென்றார். விக்ரமன், ஷிவின், அசீம் இவர்கள் மூன்று பேர் இடையே டைட்டில் வெல்வதில் கடும் போட்டி நடந்தது. இதில் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீமை வின்னராக அறிவித்தார் கமல். இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அவர் தான் பிக் பாஸ் சீசன் 7 ஹோஸ்ட் எனவும், அதற்கான ப்ரோமோ ஷூட் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.

விக்ரம் படத்தின் வெற்றியால் கமல்ஹாசனுக்கு ரசிகர்களிடம் அதிக கிரேஸ் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து இந்தியன் 2, கல்கி, KH 233 ஆகிய படங்களிலும் கமல் பிஸியாகிவிட்டார். இதனால் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு கமல்தான் ஹோஸ்ட் என்பதில் விஜய் டிவி உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக கமலுக்கு 150 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சென்னை EVP பிலிம் சிட்டியில் பிக் பாஸ் சீசன் 7-க்கான ப்ரோமோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் கமல்ஹாசன் நடித்துள்ளதோடு, விரைவில் நிகழ்ச்சிக்கான கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம். இதனால் விரைவில் பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த சீசன் ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதமோ தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X