மீண்டும் தயாராகும் காமராஜ் திரைப்படம்... 'பெருந்தலைவர்' பிறந்த நாளில் வெளியாகிறது!
சென்னை: 2004-ம் ஆண்டு திரைக்கு வந்து பலராலும் பாராட்டப்பட்ட 'காமராஜ்' திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளது.

ரிச்சர்டு மதுரம்
‘காமராஜ்' வேடத்தில் ரிச்சர்டு மதுரம் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சாருஹாசன், வி.எஸ்.ராகவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரிச்சர்டு மதுரம் இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி
இவர்களுடன் சமுத்திரகனியும் இந்தப் படத்தில் இணைகிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் விரைவில் படமாக்கப்பட உள்ளது.

பாலகிருஷ்ணன்
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் பாலகிருஷ்ணன். எம்.எம்.ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் குரலில் ஒலிக்கும் நாடு பார்த்ததுண்டா என்ற பாடல் இதில் பிரபலமான பாடலாகும்.

காமராஜர் பிறந்த நாளில்
புதுப்பொலிவுடன் ‘காமராஜ்' படம் காமராஜரின் 112-வது பிறந்தநாளான 11.07.2014 அன்று இந்தியா முழுவதும் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Click it and Unblock the Notifications