twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமராஜர் எனும் தமிழர் பெருமை!

    By Shankar
    |

    பெருந்தலைவர் காமராஜரைப் போல பட்டென்று முடிவெடுத்த முதல்வர்கள் இல்லை என்றே சொல்லலாம். அத்தனை தீர்க்கமான முடிவாகத்தான் அவர் எடுப்பார். அவரைப் போல மக்களுக்காகவே வாழ்ந்த தலைவரை இந்தப் பிறவியில் இனி யாருமே பார்க்க முடியாது.

    அந்த மக்கள் தலைவர் எப்போதும் மக்களைப் பற்றியேதான் சிந்திப்பார். பல்வேறு விஷயங்களில் காமராஜர் போகிற போக்கில் சொன்ன, ஆனால் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்க வேண்டிய கருத்துகள் இவை...

    காமராஜர் - தீர்க்கதரிசி

    காமராஜர் - தீர்க்கதரிசி

    "புராணங்கள்ல சொல்லப்பட்டிருக்குற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஏழை பாழைங்கள ஏமாத்தி தன்னோட மதத்தின் பிடிக்குள்ளயே வச்சி பொழப்பு நடத்துறான் அதாவது ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன் அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் கட்அவுட் வைக்கிறானில்லையா அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும் காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க."

    காமராசர் - பகுத்தறிவு

    காமராசர் - பகுத்தறிவு

    "மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். ஒரு தடவ சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு? எல்லாம் முடி வெட்டுறவனோட (Barber Shop ) தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?"

    காமராஜர் - யதார்த்தம்

    காமராஜர் - யதார்த்தம்

    "அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை, இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்!"

    காமராஜர் - எளிமை

    காமராஜர் - எளிமை

    "அட அரசாங்க வீடெல்லாம் வேணாம்ணேன். பெரிய மனுசங்க வந்தா கோட்டையில வந்து பாத்துக்கட்டும். நம்மள எப்போவும் பாக்கப்போறவன் சாதாரண மனுசந்தான். அவன் மாநிலத்தில பல மூலை, முடுக்குல இருந்து கெளம்பி வருவான். எக்மோரில் வந்து ஏறங்கி காமராஜ் வீடு எங்கன்னி கேட்டா டக்குண்ணு எல்லோரும் சொல்ற மாதிரி இருக்கணும்னேன், அடையாறுல, க்ரீன்வேஸ் ரோட்ல யெல்லாம் போய் ஒக்காந்துக்கிட்டோம்ணா ஏழை, பாளைங்க நம்மள பாக்க முடியுமா? ஆட்டோவுக்கு, டாக்ஸிக்கெல்லாம் குடுக்க அதுங்க எங்க போகும்?"

    - ஈபன் வேதா மதன்

    English summary
    A Compilation of Late Legendary Leader Kamaraj's comments on various issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X