காமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்

By Siva

Recommended Video

Actress SairaKhan: காமசூத்ரா 3டி படத்தில் நடித்த சாய்ரா கான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்- வீடியோ

மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடித்த சாய்ரா கான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ருபேஷ் பால் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான காமசூத்ரா 3டி படத்தில் நடித்தவர் சாய்ரா கான். பிராந்திய மொழி படங்களில் நடித்து வந்த சாய்ரா காமசூத்ரா 3டி மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் அவர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது குறித்து ருபேஷ் பால் கூறியதாவது,

மரணம்

மரணம்

சாய்ராவின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சாய்ராவின் மரணத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. மீடியாக்கள் யாரும் அது குறித்து செய்தி வெளியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

சாய்ராவின் நடிப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவர் காமசூத்ரா படத்தில் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது வேதனை அளிக்கிறது. இது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

கடினம்

கடினம்

காமசூத்ரா 3டி படத்தில் சாய்ரா அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். முதலில் அந்த படத்தில் நடிக்க அவரை சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது. ஆனால் நடிக்க ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.

சர்ச்சை

சர்ச்சை

காமசூத்ரா படத்தில் நடிக்க சம்மதிக்க சாய்ரா ரொம்பவே தயங்கினார். அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது அவர் இந்த படத்தில் நடிப்பது அறிந்து பெரிய சர்ச்சை ஆனது. அவரை நடிக்க வைக்க மாதக் கணக்கில் காத்திருந்தோம். ஆனால் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்கிறார் ருபேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X