காமசூத்ரா 3டி ரிலீஸ் எப்போ தெரியுமா?
ஷெர்லின் சோப்ரா நடித்துள்ள காமசூத்ரா 3டி படம் எப்போ ரிலீஸ் ஆகும்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை சொல்லியுள்ளார் திரைப்பட இயக்குநர் ரூபேஷ் பால். வரும் செப்டம்பர் 15ம் தேதி காமசூத்ரா ரிலீசாக உள்ளதாம்.
காமசூத்ரா 3டி 'படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அத்தனையும் முடிவடையும் நிலையில் இருக்கின்றனவாம். எனவேதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறார்.
கவர்ச்சி நடிகை செர்லின் சோப்ராவுக்கான அழகிய ஆடைகளை ஸ்பெஷலாய் வடிவமைத்திருக்கிறார் நீதா லல்லா. இவர் 'ஜோதா அக்பர்', 'தேவ்தாஸ்' படங்களுக்காகத் தேசிய விருதினை வென்றவர்.

யுடியூப் ஹிட்
காமசூத்ரா படத்தின் போட்டோ ஷூட்டின் ஒரு பகுதி வீடியோவை யூ-ட்யூபில் போட்டார் ஷெர்லின் சோப்ரா. அது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரே மாதத்தில் மில்லியன் ஹிட்ஸ் அள்ளியது.

ஷெர்லினுக்கு பை
கடுப்பான டைரக்டர் ருபேஷ் பால், காமசூத்ரா புராஜெக்ட்டிலிருந்து செர்லினுக்கு பை பை சொல்லிவிட்டு, ஹாலிவுட்டின் இளம் நடிகைகளான ஈவா லாங்காரியா அல்லது மிலா குனிஸ் இருவரில் ஒருவரை ஃபிக்ஸ் செய்யலாம் என்று முடிவு செய்தார்.

மன்னிப்பு கேட்ட ஷெர்லின்
இந்த தகவல் அறிந்து பதறிப்போன செர்லின் உடனே டைரக்டரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்கவே மனம் இரங்கி ஷெர்லினை நடிக்க வைத்தார் ரூபேஷ் பால். இதோ படத்திற்காக வேலைகள் முடிந்துவிட்டதால் செப்டம்பர் 15ல் ரிலீசாகும் என்று அறிவித்துவிட்டார்.

மூன்று விதமான படம்
இந்திய ரசிகர்களுக்கு ஒருமாதிரியாகவும், தொலைக்காட்சிக்கு ஒரு மாதிரியாகவும், உலக ரசிகர்களுக்கு புது மாதிரியாகவும் எடிட் செய்து படத்தை வெளியிட உள்ளார் ரூபேஷ் பால்.
எப்படியாச்சும்படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











