Don't Miss!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Finance
தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?
- Automobiles
60 லட்சம் கிலோ எடையை இழுத்து கொண்டு அசால்டாக 120 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
- Lifestyle
இந்த 4 ராசிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ரொம்ப பிடித்த ராசிகளாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Technology
Gmail Tips- ஒரே க்ளிக்கில் மொத்த Inbox-ஐ டெலிட் செய்யலாம்!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
நாசருக்கு சினிமா தான் மூச்சு.. வதந்தியை பரப்ப வேண்டாம்.. டென்ஷனான கமீலா நாசர்!
சென்னை : நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகி விட்டதாக பரவிய வதந்திக்கு அவரது மனைவி கமீலா நாசர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
1985ம் ஆண்டு இயக்குநர் கேபாலச்சந்தர் இயக்கிய கல்யாண அகத்திகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நாசர். இதையடுத்து ஓரிரு படங்களில் நடித்து வந்த நாசருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது நாயகன். அந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
நாயகன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் நாசர் நடித்து வருகிறார்.
அன்று
திட்டு..
இன்று
பாராட்டு..
அண்ணனுக்கு
வாழ்த்து
சொன்ன
வனிதா..
சொந்தம்
விட்டுபோகுமா
என்ன?

நடிகர் நாசர்
கதாநாயகர்களுக்கு என்று பல இலக்கணங்கள் உண்டு, ஆனால் வில்லன் நடிகர்களுக்கு இலக்கணமே இல்லை. முரட்டுத்தனமாக, சற்று தடித்த மீசையுடன் இருந்தால் போதும். அப்படி தனது வித்தியாசமான 'மூக்கால்' வில்லன் நடிகர் என்று பேரெடுத்து கொடிகட்டி பறந்தவர் நடிகர் நாசர். முரட்டுத்தனமான வில்லன், கோபக்கார போலீஸ், கெட்ட போலீஸ் என வெரைட்டி வெரைட்டி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனிஇடத்தை பிடித்தார் நாசர்.

30 ஆண்டு சினிமா பயணம்
சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நாசர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் வாய்தா என்ற படத்தில் வழக்கறிஞராகவும் நடித்து வருகிறார்.

நடிக்க மாட்டார்
கடந்த சில நாட்களாக சமூகவலைத்தள பக்கத்தில் நடிகர் நாசர் உடல்நலக்குறைவால் இருப்பதாகவும் அதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், சினிமாவை விட்டுவிலக போவதாகவும் தகவல்கள் பரவியது. இந்த வதந்தி காட்டுத்தீ போல் சோஷியல் மீடியாவில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முற்றுப்புள்ளி
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நாசரின் மனைவி கமீலா நாசர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள கமீலா, நாசரின் உடல் நிலை குறித்தும், அவர் இனி நடிக்க மாட்டார் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை தொடக்கி வைத்தவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து இன்னும் பலர் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டும். நாசர் சினிமாவை தான் சுவாசிக்கிறார், அது தான் அவரது உணவு. அக்கறை காட்டிய நண்பர்களுக்கும் நன்றி. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.