ஆட்டம் போட்ட "கனா காணும் காலங்கள்".. அதுக்குத்தானா.. 90ஸ் கிட்ஸ் களுக்கு கொண்டாட்டம் தான்!

சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலான கனா காணும் காலங்கள் மறுபடியும் புதிய பொலிவில் வரப்போகிறதா என்ற இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கனா காணும் காலங்கள் டீம் ஒன்றாக சேர்ந்துள்ளது. அவர்களுக்கு மட்டுமல்ல சீரியலின் ரசிகர்களுக்கும் செம ஹாப்பி தான்.

என்ன சொல்லப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்க , போட்டோ சூட்டை மட்டும் முடித்துவிட்டு கிளம்பியிருக்கும் கனா காணும் காலங்கள் டீம் எப்போது மீண்டும் திரையில் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

கல்லூரிக் காலம்

கல்லூரிக் காலம்

இன்று எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் அவருடைய பள்ளி காலத்தையும் கல்லூரி காலத்தையும் மறக்கவே முடியாது .இந்தக் காலகட்டத்தில் சின்ன கஷ்டங்கள் பெரிய சந்தோஷங்கள் அனைத்தையும் அனுபவித்து அந்த நேரத்தில் பெரியதாக தெரியாத ஒவ்வொரு விஷயமும் பல வருடங்கள் கழித்து பொக்கிஷமாக தெரிகின்றது . அதனால்தான் மீண்டும் தான் கடந்துவந்த பாதையை யாரேனும் ஞாபகப்படுத்தினால் அதை மனது நம்மை அறியாமலேயே நேசிக்கவும் தேடவும் துடிக்கின்றது.

சூப்பர் சீரியல்

சூப்பர் சீரியல்

அந்த மாதிரிதான் தன்னுடைய பள்ளிப் பருவத்தையும் கல்லூரி பருவத்தையும் பலருக்கும் ஞாபகப்படுத்தும் வகையில் தத்துரூபமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியல் ஏற்படுத்தியிருந்தது. இந்த சீரியலில் காதல் மோதல் நட்பு சந்தோசம் காமெடி எல்லாத்தையும் பார்த்த ரசிகர்களால் இப்ப வரைக்கும் அந்த சீரியலை மறக்க முடியவில்லை. அந்த மாதிரி ஒரு சீரியல் வராதா என பலர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜாலியான சீரியல்

ஜாலியான சீரியல்

பொதுவாக சீரியல்கள் என்றாலே அழுகாச்சி சீன்களாகவே பல நேரங்களில் இருந்து வருகிறது .சில நேரங்களில் வீட்டில் இருப்பவர்களையும் சொந்த பந்தங்களையும் எப்படி எல்லாம் பழி வாங்கலாம் என்று ரூம் போட்டு யோசித்த வருகின்றனர் .இதனால் இதனை பலரும் விரும்புவதில்லை .சில பெண்கள் இந்த சீரியலுக்கு அடிமையாகி இருந்தாலும் சிலர் சீரியலை பார்த்தால் குடும்ப ஒற்றுமையே போய் விடும் என்று பயந்து வருகின்றனர்.

பெரியவர்கள் வரை

பெரியவர்கள் வரை

ஆனால் இந்த கனா காணும் காலங்கள் சீரியலுக்கு மட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வந்தனர் .அதனால்தான் அது பல சீசன் களாக ஒளிபரப்பப்பட்டு வந்தது . எத்தனை சீசன்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் பள்ளிப் பருவமும், கல்லூரி பருவமும் மலரும் ஞாபகமாக தான் இருந்து வருகிறது .அதனால் தான் தற்போது அந்த சீரியலில் நடித்தவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருக்கின்றனர். இவர்களுடைய போட்டோக்களும் வீடியோக்களும் தற்போது வைரலாக இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறது.

மீண்டும் கொண்டாட்டம்

மீண்டும் கொண்டாட்டம்

இந்த சீரியலில் நடித்த பலரும் கனா காணும் காலங்கள் ரீயூனியன் எனும் ஒரு பங்ஷனில் சேர்ந்து போட்டோசூட் எடுத்திருக்கின்றனர் .அதில் ஹரிப்ரியா, நிஷா, கார்த்திக் வாசுதேவன், அழகப்பன், அஷ்ரிதா ,கணேஷ் பிரபு ,ஸ்வேதா மற்றும் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இது எந்த மாதிரி பங்க்ஷன் என்று பலர் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் பண்ணி வருகின்றனர்.

அழகப்பன்

ஆனால் ஹரி பிரியா ,அழகப்பன் போன்ற ஒருசிலர் இவர்கள் போட்ட ஆட்டத்தை அப்படியே வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கின்றனர். இதைப் பார்த்ததும் இவர்களுடைய ரசிகர்கள் தொடர்ந்து வெயிட்டிங் ஃபார் திஸ் ப்ரோக்ராம் என்று காத்திருக்கின்றனர். இது மீண்டும் ஒளிபரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X