நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா!

சென்னை : நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்டமாக சூட்டிங் நடைபெற்று வருகிறது.

விஜய் 66 படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படம் வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்றுள்ளார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார்.

குடும்ப சென்டிமெண்ட் படம்

குடும்ப சென்டிமெண்ட் படம்

படத்தை தயாரித்துவரும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வரிசையில் ஏஆர் முருகதாஸ், சிவா உள்ளிட்ட இயக்குநர்களும் உள்ளனர்.

அருண்ராஜா காமராஜ் விருப்பம்

அருண்ராஜா காமராஜ் விருப்பம்

இந்நிலையில் விஜய்யை வைத்து தான் ஒரு படம் இயக்க விரும்புவதாக பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார். தான் ஒரு ரசிகராக விஜய்யை இயக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். கனா என்ற சிறப்பான படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்முகத் திறமை

பன்முகத் திறமை

பாடலாசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர் என்று பல்வேறு அவதாரங்களுடன் காணப்படுகிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். தற்போது உதயநிதி, தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் அவர் இயக்கியுள்ள நெஞ்சுக்கு நீதி படம் ரிலீசாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X