சீன மொழியில் வெளியாகும் கனா.. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை: தமிழ் திரைப்படங்கள் சமீப காலமாக உலகளவில் அங்கீகாரங்களை பெற்று வருகின்றன.
ரஷ்ய மொழியில் விரைவில் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் சீன மொழியில் வெளியாக உள்ள அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த சந்தோஷ அறிவிப்பை பார்த்ததுமே அதன் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள ட்வீட்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கனா
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் கனா. சாதாரண விவசாயியின் மகள் எப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனை படைக்கிறாள் என்கிற கதையை அருமையாக எடுத்திருப்பார் அருண்ராஜா காமராஜ்.

அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷின் ஜூனியர் வெர்ஷனாக நடித்த குழந்தைகள் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை கெளசல்யா முருகேசன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார்கள். முருகேசனாக நடித்த சத்யராஜ் தனது பங்குக்கு நடிப்பால் பல சிக்சர்களை பறக்கவிட்டார்.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமையை கொண்டு கோலிவுட்டையே கலக்கி வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இருந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்தார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸை தொடங்கி தனது நண்பர் அருண்ராஜா காமராஜை நம்பி முதலீடு செய்ய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை அவர் கொடுத்தார்.

நெல்சன் திலீப்குமார்
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பெயரை கொண்ட கிரிக்கெட் வீரராக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருப்பார். மெக்கானிக்காக என்ட்ரி கொடுத்து மகளிர் கிரிக்கெட் அணியின் கோச்சாக வரும் சிவகார்த்திகேயன் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சொல்லும் அட்வைஸ் எல்லாம் வேற லெவலில் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆனது.

சீனாவில் கனா
சர்வதேச அங்கீகாரத்தை பெற்று வரும் தமிழ் படங்கள் வரிசையில் கனா திரைப்படம் தற்போது சீன மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வரும் மார்ச் 18ம் தேதி வெளியாக உள்ள அறிவிப்பை Yi Shi Films நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை இயக்குநர் அருண்ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கனா படக்குழுவினர் தற்போது ஷேர் செய்துள்ளனர்.

சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்
எஸ்கே புரொடக்ஷனின் முதல் திரைப்படமான கனா திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வரும் மார்ச் 18ம் தேதி வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை ரசிகர்களுடன் ஷேர் செய்வதில் ரொம்ப சந்தோஷம். கனா படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் இது பெரிய பெருமைமிகு தருணம் என சிவகார்த்திகேயன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











