பாலிவுட் செல்கிறாரா ’லோக்கல் ஷாருக்’சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்.. ஆச்சர்யத்தில் கோலிவுட்!
சென்னை: 'லோக்கல் ஷாருக்கான்' என ரெமோ படத்தில் வரும் பாடல் வரிகளை போல ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக வளர்ந்து வெள்ளித்திரையில் இளம் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகராக கலக்கி வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளராகவும் வெற்றியை ருசித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்து வரும் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். டோலிவுட் நடிகை பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார்.

ஏலியன் படம்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. இந்நிலையில், இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படமும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

பாலிவுட் செல்லும் கனா
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான இந்த படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இந்தியில் உருவாகப் போவதாக வந்துள்ள செய்திகள் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஹீரோயின் இவரா?
தமிழில் கெளசல்யா முருகேசனாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த நிலையில், பாலிவுட்டில் உருவாகப் போகும் கனா திரைப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகை சயாமி கேரின் சோக்கட் படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன், அவருடன் கிரிக்கெட் படம் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்மூலம், அவர் தான் ஹீரோயினா என்றும் ரசிகர்கள் ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
Recommended Video

பாலிவுட் என்ட்ரி
அப்படி கனா படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால், அந்த படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்த சிவகார்த்திகேயனே, பாலிவுட்டிலும் நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











