சத்யராஜ் வாக்கு பலித்தது...SK வெரி ஹாப்பி, சைனாவில் ரிலீஸாகும் இரண்டாவது தமிழ் படம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் கனா. கிரிக்கெட்டை மையக் கருவாக வைத்து பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்க சத்யராஜ் சிவகார்த்திகேயன் போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்ற கருத்தை ஓங்கி ஒலித்த படும்.
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.O க்கு பிறகு ஒரு அரிதான சாதனையை வெளிநாடுகளில் கனாபடம் சாதித்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

அருண்ராஜா காமராஜ் முதல் படம்
இயக்குனர் ஆக வேண்டும் எனும் பெரும் கனவு இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பல தமிழ் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் சில காலம் இயக்குனர் நெல்சன் இடம் உதவி இயக்குனராக இருந்து டைரக்ஷன் கற்றுக்கொண்டார். பிறகு தனது நீண்டகால நண்பரான சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையைச் சொல்லி படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார். தனது முதல் படமான கனா மூலம் நல்ல இயக்குனர் என முத்திரை பதித்தார்.

நட்புக்காக
சிவகார்த்திகேயன் கனா படம் பற்றி கூறுகையில், கனா படம் தயாரிப்பதற்கான முக்கிய காரணம் தனது நண்பனான அருண்ராஜா காமராஜ் பெரிய இயக்குனராக வேண்டும் என்பதே என சொல்லியிருக்கிறார். கனா சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படம். இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கும் காரணம் நட்பே என ரசிகர்களால் போற்றப்படுகிறது.

சத்யராஜின் கணிப்பு
கனா படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் சத்யராஜ் கனா படத்தைப் பற்றிப் பேசும்போது ஹிந்தி படம் " டங்கள் " போல கனா படமும் சைனாவிலும் ரிலீசாகி பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தி இருப்பார். அப்போது அவர் சொன்னது போல படம் சைனாவில் ரிலீசாகப் போகிறது. சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோவில் சத்யராஜ் பேசும்போது முன்பு அவர் பேசியதை மேற்கோள்காட்டி தான் சொன்னது நடந்து விட்டது போல பெருமையாக சொல்லி இருக்கிறார். கனா படம் சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த குணச்சித்திர நடிகர் என பல விருதுகளை அள்ளிக் குவித்தது.

சைனாவில் இரண்டாவது படம்
கனா திரைப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று ஒரு நல்ல கலைப் படைப்பாகவும் பெயர் வாங்கியது. இந்நிலையில் இந்த படம் சீனாவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ரஜினி நடித்த 2.O க்கு பிறகு சைனாவில் ரிலீஸ் ஆகப் போகும் இரண்டாவது படம் எனும் பெருமையைப் பெறுகிறது. இந்த ஆனந்தத் தருணத்தை வெளிப்படுத்தும் விதமாக இதன் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











