வெளியானது #KanaaSneakPeek: சத்யராஜ் சத்யராஜ் தான், கலக்குறார் போங்க
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள கனா படத்தின் ஸ்னீக்பீக் வெளியாகியுள்ளது.
நண்பன் அருண்ராஜா காமராஜ் இயக்க சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார். இந்த படம் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க அவரின் செல்ல மகள் ஆராத்யா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயனும், ஆராத்யாவும் சேர்ந்து பாடிய வாயாடி பெத்தப்புள்ள பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கனா படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக்பீக் இன்று வெளியாகியுள்ளது.
ஸ்னீக்பீக்கில், வீட்டு வேலையை பார்க்காமல் பொம்பள புள்ள பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதா என்று கேட்டு ஐஸ்வர்யா ராஜேஷை அடிக்க வரும் அம்மாவிடம் இருந்து அவரை காப்பாற்றுகிறார் அப்பா சத்யராஜ்.
மகள்களுக்கு பிடித்த அப்பாவாக நடிப்பதில் சத்யராஜை அடித்துக் கொள்ள சத்யராஜால் தான் முடியும்.


Click it and Unblock the Notifications











