எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: மாஸ் காட்டும் கனா ட்ரெய்லர்
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள படம் கனா. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் அவர்.
இந்நிலையில் கனா படத்தின் ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
கிரிக்கெட் விளையாடி அப்பாவை மகிழ்விக்கத் துடிக்கும் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களின் வீடுகளிலேயே மகனை தானே தவிர மகளை கிரிக்கெட் விளையாட அனுப்பவில்லை என்கிறார்கள் கிராமத்து மக்கள். இந்த உலகம் நான் ஜெயிச்சிருவேன்னு சொன்னால் கேட்காது, ஆனால் ஜெயிச்சவன் சொன்னால் கேட்கும். நீ எது பேசுவதாக இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு என்று சிவா ஐஸ்வர்யாவிடம் கூறுவதுடன் ட்ரெய்லர் முடிகிறது.
கோலிவுட்
கிரிக்கெட், கிரிக்கெட் என்று கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை படமாக்கியுள்ளனர். ட்ரெய்லரை பார்த்தால் நிச்சயம் படம் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. படத்திற்காக ஐஸ்வர்யா தீவிர பயிற்சி எடுத்திருப்பார் என்பதும் தெரிகிறது. கனா படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அருமை
உன்னால முடியாதுனு ஒருத்தன் சொன்னா நம்ப வேண்டியது அவன இல்ல உன்ன என்கிற வசனம் அருமை #Kanaa
கெட்டப்
கனா படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். அவரின் கெட்டப் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











