#Kanaa: சூரிக்கு லைட்டா வருத்தம், ரசிகர்களுக்கோ...- ட்விட்டர் விமர்சனம்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான கனா இன்று ரிலீஸாகியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த கனா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
கிரிக்கெட்
கிரிக்கெட்டுடன் விவசாயத்தையும் கலந்து காட்டியிருக்கிறது கனா.
தாங்க வேண்டிய படம்
விவசாய வலியை உலகுக்கு உரக்க சொன்ன கனா படத்தில் அணில் அளவு பங்களிப்பையாவது பங்கு @Siva_Kartikeyan பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மன நிறைவாக இருந்திருக்கும். பட குழுவை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்! தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் #கனா
அருமை
#கனா செம படம்.குறிப்பாக குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம்.வசனங்கள் நெஞ்சை தொடுகிறது👌
வாழ்த்துக்கள்.... #KanaaFromToday
தந்தை-மகள்
என் மகளின் கனவு நிறைவேறும் என்பதை கனா உறுதி செய்துள்ளது. தந்தை-மகள் உறவு, பெண்கள் கிரிக்கெட், குறிப்பாக விவசாயிகளுக்காக இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். நான் வழக்கமாக அழ மாட்டேன் ஆனால் இன்று அழுதேன்.


Click it and Unblock the Notifications











