Kanaga: "கரகாட்டகாரன் கனகாவா இது..? ராமராஜன் கூட இத நம்பமாட்டாரே... தீயாகப் பரவும் போட்டோ!
சென்னை: ராமராஜன் நடித்த கரக்காட்டகாரன் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கனகா.
ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என 1990களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கனகாவின் சமீபத்திய போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் கனகாவின் லேட்டஸ்ட் போட்டோ
1989ல் வெளியான கரகாட்டகாரன் திரைப்படம் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக ஓடி சாதனைப் படைத்தது. கங்கை அமரன் இயக்கிய இந்தப் படத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கனகா அறிமுகமானார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகாவுக்கு, கரகாட்டகாரன் திரைப்படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
முதல் படத்திலேயே உச்சம் தொட்ட கனகா, 10 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி, கேப்டன் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராமராஜன், சரத்குமார் என அப்போதைய டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். கனகாவின் அழகே அவரது கண்கள் தான் என ரசிகர்கள் கொண்டாடினர். 1990களில் கனகாவை தங்களது கனவுக் கன்னியாகவும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
கனகா கடைசியாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதுவும் நடிகை கனகாவாகவே நடித்திருந்தார். அதன்பின்னர் அவருக்கு பெரிய அளவில் சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களில் நடித்திருந்தார் கனகா. தற்போது சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கனகாவின் சமீபத்திய போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அவரை நடிகை குட்டி பத்மினி நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படங்களில் நடிக்கும்போது ரொம்பவே ஒல்லியாக இருந்த கனகா, தற்போது பருமனாக காணப்படுகிறார். அவரைப் பார்த்தால் கனகா தான் என யாருமே சொல்ல முடியாது.
இப்படியொரு கெட்டப்பில் கனகாவை பார்த்த ரசிகர்கள், இதனை ராமராஜனே நம்ப மாட்டாரே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கரகாட்டகாரன் உட்பட பல படங்களிலும் தனது கண்களாலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் கனகா. ஆனால், இப்போது ரொம்பவே மாறிவிட்டது 90ஸ் கிட்ஸ் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











