உள்ளாடை இல்லாத கங்கனா போஸ்டர்... இது எந்த படத்துல இருந்து சுட்டது தெரியுமா?

நடிகை கங்கனா ரனாவத்தின் ஐ லவ் யூ பாஸ் பட போஸ்டர், ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

சென்னை: நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர், ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை கங்கனா ரனாவத். தாம் தூம் படத்தை அடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் அவர் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார். இப்படம் இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் வெளியாகும்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாலஜ் நிலானியின் 'ஐ லவ் யூ பாஸ்' படம் தொடர்பாக இயக்குனருக்கும் கங்கனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தன்னை உள்ளாடை போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, இயக்குனர் நிலானி வற்புறுத்தியதாக கங்கனா கூறினார். மேலும் 'ஐ லவ் யூ பாஸ்' ஒரு வகையான ஆபாச படம் என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்குனர் மறுப்பு

இயக்குனர் மறுப்பு

ஆனால் கங்கனாவின் இந்த புகாரை இயக்குனர் நிலானி திட்டவட்டமாக மறுத்தார். 'ஐ லவ் யூ பாஸ்' ஆபாச படம் இல்லை என்றும் அவர் கூறினார். இவர்களின் இந்த சண்டையால் கங்கனாவின் அந்த உள்ளாடை இல்லாத புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஹாலிவுட் படத்தின் காப்பி

ஹாலிவுட் படத்தின் காப்பி

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அந்த போஸ்டர் ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 'ஷோ கேர்ள்ஸ்' எனும் படத்தில் இருந்து தான் அந்த போஸ்டரை இயக்குனர் நிலானி காப்பி அடித்துள்ளார்.

ஷோ கேர்ள்ஸ் திரைப்படம்

ஷோ கேர்ள்ஸ் திரைப்படம்

பால் வெர்ஹோவன் இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளிவந்த பிரஞ்ச் - அமெரிக்க திரைப்படம் தான் 'ஷோ கேர்ள்ஸ்'. எலிசபெத் பெர்க்லி, கைல் மெக்லேச்சன், கினா கெர்சன் உள்பட நிறைய நடிகைகள் இந்த படத்தில் நடித்திருப்பர். இது ஒருவகையான ஆபாச படம் தான்.

குற்றச்சாட்டு உண்மை

குற்றச்சாட்டு உண்மை

இந்த படத்தின் போஸ்டரை பார்த்து தான் அப்படியே காப்பியடித்திருக்கிறார் இயக்குனர் நிலானி. 'ஷோ கேர்ள்ஸ்' ஒரு எரோடிக் படம் என்பதால், நிலானிக்கு எதிராக கங்கனா கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X