விஜய் டான்ஸ்ல ஒரு மேஜிக் இருக்கும்.. கணம் படத்தோட நாயகன் சொன்னத பாருங்க!
சென்னை : அமலா, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 9ம் தேதி ரிலீசாக உள்ளது கணம்.
தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு அமலா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழில் கணம் என்றும் தெலுங்கில் ஒகெ ஜீவிதம் என்றும் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகை அமலா
நடிகை அமலா மைதிலி என்னை காதலி என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர். டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பரதநாட்டிய டான்சராக நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றி இவரை ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வைத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கணம் படத்தில் ரீ-என்ட்ரி
இதையடுத்து நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தற்போது கணம் என்ற படத்தில்
இவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாக உள்ளது.

ஹீரோவாக சர்வானந்த்
இந்தப் படத்தில் அமலாவுடன் சர்வானந்த், ரீத்து வர்மா, நாசர், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமிழில் கணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல தெலுங்கில் ஒகே ஜீவிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்தி பாடிய பாடல்
இந்தப் படத்தில் அம்மா சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதேபோல மாறிப்போச்சோ என்ற பாடலும் வெளியானது. இந்தப் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். மேலும் டைம் டிராவல் படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மியூசிக் வீடியோவிலும் கார்த்தி இடம்பெற்றுள்ளார்.

விஜய் டான்சில் மேஜிக்
இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்களில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. நடிகர் சர்வானந்த் இந்தப் படத்திற்காக கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் விஜய்யின் டான்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் விஜய்யின் டான்சில் ஒரு மேஜிக் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடனத்தை அனுபவித்து ஆடும் விஜய்
அல்லு அர்ஜுன், ராம்சரண் இவர்களை காட்டிலும் விஜய்யின் நடனம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சர்வானந்த் தெரிவித்துள்ளார். விஜய் தான் ஆடும் நடனத்தை மிகவும் அனுபவித்து ஆடுவார் என்றும் அவரது அரபிக்குத்து பாடலுக்கான நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் சர்வானந்த் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலங்களுக்கு பிறகு சர்வானந்த்
தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்தவர் சர்வானந்த். தமிழ் ரசிகர்களை தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்ந்த இவர், தொடர்ந்து தெலுங்கில் சிறப்பான பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











