Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவனும் புகுந்தவீட்டாரும் எப்படி நடத்துகிறார்கள் ...ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புது படம்
சென்னை: கணவனும் புகுந்தவீட்டாரும் எப்படி நடத்துகிறார்கள் R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது.
மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் 'புரொடக்க்ஷன் 5' தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட" தி கிரேட் இந்தியன் கிச்சன் " படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார்.
கணவனும் புகுந்தவீட்டாரும்
இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை.
முதல் நாள் படபிடிப்பில்
இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.
அந்தாள ராட்சசி
காரைக்குடியிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெறும். இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ' மாஸ்கோவின் காவேரி ' படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு ' வணக்கம் சென்னை ', யூ- டர்ன் ' மற்றும் பல படங்களில் நடித்தார். அதே வேளையில் 'அந்தாள ராட்சசி' படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் .
பாலசுப்ரமணியெம்
தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் - தெலுங்கு மொழிகளில் நடிக்கும் இவர் இன்று முதல் படபிடிப்பில் கலந்து கொள்கிறார். மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம், R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!