Exclusive: ஹவுஸ்புல் தியேட்டர்கள்... வசூல் மழை பொழியும் காஞ்சனா 3... முதல் நாளில் வசூல் நிலவரம்!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.
Recommended Video
சென்னை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம் காஞ்சனா 3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷிணி, டெல்லி கணேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
நேற்று வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிடப்பட்ட பெரும்பாலான தியேட்டர்கள், நேற்று காலை காட்சி முதல் இரவு காட்சி வரை ஹவுஸ்புல்லாக இருந்தது.
ஆன்லைன் முன்பதிவில் இன்றும், நாளையும் அனைத்து காட்சிகளும் இப்போதே புக் செய்யப்பட்டு வருகின்றன. எனவே இத்திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

ரூ.10 கோடி வசூல்
காஞ்சனா திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது, "காஞ்சனா 3 திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது. அடுத்த இரண்டு நாட்களும் தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக இருக்கும்", என்றார்.

மூன்று நாளில் ரூ.28 கோடி
மேலும், "முதல் நாளில் தமிழ்நாடு முழுக்க ரூ.9.85 கோடியை படம் வசூல் செய்துள்ளது. முதல் மூன்று நாட்களில் இந்த படம் ரூ.28 கோடி அளவுக்கு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது", திருச்சி ஸ்ரீதர் கூறினார்.

சென்னை வசூல்
சென்னை வசூல் நிலவரம் குறித்த தகவலை அவர் தரவில்லை. வேறு சிலரிடம் கேட்ட போது, சென்னையில் முதல் நாள் வசூல் ஒன்றரை கோடியில் இருந்து 2 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.

நல்ல லாபம்
காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தாலும், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தான் இதனை வெளியிடுகிறது. எனவே, தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் இப்படம் நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. காஞ்சனா 3 படத்துடன், புதுமுகங்கள் நடித்த மெஹந்தி சர்க்கஸ் மற்றும் விவேக் நடித்த வெள்ளைப் பூக்கள் திரைப்படம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











