twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்நாடக பந்த்தால் பொலிவிழந்த "கண்மணியும், காஞ்சனாவும்"!

    |

    பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக நேற்று கர்நாடகத்தின் சில பகுதிகளில் ஓ காதல் கண்மணி மற்றும் காஞ்சனா 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

    இரு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் பரவி வருவதால் தமிழகத்தில் இப்படங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதேபோல பிற மாநிலங்களிலும் வசூல் திருப்திகரமாக உள்ளதாம்.

    ஆனால் கர்நாடகத்தில்தான் இதன் வசூலில் நேற்று சற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நடந்த பந்த் காரணமாக இரு படங்களின் வசூலும் பாதிப்பைச் சந்தித்தது. மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே ஓடின.

    நல்ல வரவேற்பு...

    நல்ல வரவேற்பு...

    ரிலீஸானபோது இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓ காதல் கண்மணிக்கு பெங்களூரில் 82 காட்சிகள் ஓடின. காஞ்சனாவுக்கு 67 காட்சிகள் ஓடின.

    ஹவுஸ் புல்...

    ஹவுஸ் புல்...

    முதல் நாளில் கண்மணி ஓடிய தியேட்டர்களில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பின. காஞ்சனாவுக்கு 65 சதவீத சீட்டுகள் நிரம்பியிருந்தன. மேலும் முக்கிய தியேட்டர்களில் இரு படங்களும் ஹவுஸ் புல் ஆகியிருந்தன.

    பந்த்...

    பந்த்...

    ஆனால் நேற்று இரு படங்களின் வேகமும் தடைபட்டு் போனது. பந்த் காரணமாக பகல் காட்சிகள் எதுவும் ஓடவில்லை. மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே ஓடின.

    பெரும்பாலான பகுதிகளில்...

    பெரும்பாலான பகுதிகளில்...

    பெங்களூரு மட்டுமல்லாமல் மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடகப் பகுதிகளிலும் நேற்று இதே நிலைதான் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல காட்சிகள் இருந்தன.

    அலை மோதிய கூட்டம்...

    அலை மோதிய கூட்டம்...

    இன்று அனைத்துத் தியேட்டர்களிலும் படம் நல்ல கூட்டத்துடன் ஓடுகிறதாம். எனவே இன்று நல்ல வசூலைப் பெறலம் என்ற நம்பிக்கை காணப்படுகிறதாம். இன்று இரு படங்களும் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.

    கூடுதல் திரைகள்...

    கூடுதல் திரைகள்...

    காஞ்சனா இன்று 100 திரைகளில் திரையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கண்மணிக்கு 80 திரைகளாக கூடியுள்ளதாம்.

    English summary
    This week releases like "Kanchana 2" and "Ok Kanmani" were affected by bandh on Saturday, 18 April in Karnataka. As a result, the movies failed to make good business as the films had only evening shows.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X