Don't Miss!
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காஞ்சனா 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகை தற்கொலை; இன்னொரு ரஷ்ய பெண்ணும் மர்மமான முறையில் மரணம்
கோவா: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் ரோஸி கதாபாத்திரத்தில் நடித்த ரஷ்ய நடிகை கோவாவில் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், மற்றொரு ரஷ்ய பெண்ணும் கோவாவில் மர்மான முறையில் இறந்துள்ள சம்பவம் கோவா போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ராஜு பாய் 'அஞ்சான்' 7 ஆண்டு நிறைவு… இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!
சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக காஞ்சனா 3 படத்தில் நடித்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி புகார் அளித்திருந்தார்.

ரஷ்ய நடிகை தற்கொலை
ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி (Alexandra Djavi) கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவருக்கு வயது 24. நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் இவர் நடித்திருந்தார்.

காஞ்சனா நடிகை
இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஜாவி என மொத்தம் நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்த படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் இவர் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தார்.

பாலியல் புகார்
காஞ்சனா 3 திரைப்படம் வெளியான அதே ஆண்டு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்க அந்த புகைப்படக் கலைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

காதலருடன்
ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான இவர் தொடர்ந்து கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழனன்று திடீரென வாடகை வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் அவர் இறந்து கிடந்த தகவல் தெரியவந்ததும் கோவா போலீசார் அவரது உடலை மீட்டு பம்போலிம் எனும் இடத்தில் உள்ள கோவா மெடிக்கல் காலேஜில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

சேலையில் தூக்கிட்டு
காஞ்சனா 3 பட நடிகை அலெக்ஸாண்ட்ரா தனது காதலரை பிரிந்த சோகத்தில் இப்படியொரு முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிகப்பு நிற சேலையில், ஃபேன் மாட்டும் ஹூக்கில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கிடந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு ரஷ்ய பெண் மரணம்
அதே வியாழன் அன்று இன்னொரு ரஷ்ய பெண்ணும் மர்மமான முறையில் ஆக்சல் வாடகை வீட்டில் இறந்து கிடந்த தகவல் கிடைத்து அந்த பெண்ணையும் மீட்டு அதே மருத்துவமனையில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரி சுராஜ் கவாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்பு இருக்கா
இரு மரணங்களுக்கு இடையே ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அல்லது தற்செயலாக நடந்த தற்கொலைகளா? என பல கோணங்களில் கோவா போலீசார் இந்த விவாகாரத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், ரஷ்ய தூதரகம் மற்றும் இறந்த பெண்களின் உறவினர்களின் அனுமதி உள்ளிட்டவற்றிற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிர்ச்சியில் கோவா
அடுத்தடுத்து கோவாவில் இப்படி இரு ரஷ்ய நாட்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்த செய்தியை அறிந்த கோவா மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவா போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.