அட ஆச்சரியமா இருக்கே.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'காஞ்சனா 3' நடிகை கன்பர்ம்.. புரமோஷனில் அசத்தல்!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'காஞ்சனா 3' பட நடிகை பங்கேற்பது உறுதியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று மாலை 6 ஒளிபரப்பாக தொடங்குகிறது.

கடந்த ஒரு மாதமாகவே இதுபற்றி பரபரப்பான செய்திகள் தரதரவென வெளியாகிக் கொண்டே இருந்தது.

அதிகாரபூர்வமாக

அதிகாரபூர்வமாக

இன்று மாலை இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில் யார் யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது இன்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதுபற்றி யூகங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. பலவிதமான பட்டியல்கள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

இருந்தாலும் அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, சனம் ஷெட்டி ஆரி, அர்ச்சனா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனு மோகன், காயத்ரி சங்கர்ம் சம்யுத்தா கார்த்திக், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

வழக்கம்போல் இந்த சீசனிலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சியை வழங்கும் கமல்ஹாசன், ஒவ்வொரு நாளும் இன்னும் ஒரு ரெணு நாள்தான் பாக்கி, ஒரு நாள் பாக்கி என்று ரசிகர்களின் பிபி-யை எகிற வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று முடிவு தெரிந்துவிடும்.

இந்தி பிக்பாஸ்

இந்தி பிக்பாஸ்

இன்று முதல் 105 நாட்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கிடையே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி 14 வது சீசனும் இன்று மாலை ஒளிபரப்பாகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கபவர்கள் குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை.

நிக்கி தம்போலி

நிக்கி தம்போலி

இந்நிலையில் கஞ்சனா 3 நடிகை பங்கேற்கும் தகவல் நேற்று வெளியானது. அவரை பிக் பாஸ் குழு நேற்று அறிமுகப்படுத்தியது. ஏற்கன்வே ஜான் குமார் ஜானுவை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் குழு இப்போது இவரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த நடிகை நிக்கி தம்போலி!

Recommended Video

Bigg Boss 4 Tamil Promo | Gossip, Highlights, Trolls
புரமோஷன் வீடியோ

புரமோஷன் வீடியோ

நிக்கி, சல்மான் கானுடன் பேசும் புரமோஷன் வீடியோ நேற்று வெளியாகி வைரலானது. இந்த நிக்கி தம்போலி, தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்தவர். பின் தெலுங்கில் சில படங்களில் நடித்தார். கன்னடத்திலும் நடித்து வருகிறார். இப்போது ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X