காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
சென்னை: காஞ்சனா 3 படத்தின் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நிக்கி தம்போலி
இந்நிலையில் இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்த நிக்கி தம்போலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை நிக்கி தம்போலியே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செல்ப் குவாரண்டைன்
இதுதொடர்பான அவரது பதிவில், எனக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்டது. நான் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளேன், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்கிறேன்.

பாதுகாப்பாக இருங்கள்
கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்,
எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.

கொரோனா பரிசோதனை
உங்கள் கைகளை தவறாமல் கழுவுங்கள், சோஷியல் டிஸ்டன்ஸை பின்பற்றுங்கள். அன்பும் வெளிச்சமும். நிக்கி தம்போலி " இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிக்கி தம்போலி தன்னுடைய வயதான பெற்றோருடன் வசித்து வருவதால் படப்பிடிப்பில் இருந்து திரும்பியதும் கொரோனா பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

ரூல்ஸ் ஃபாலோ
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள அவர் மும்பை மாநகராட்சியின் அனைத்து ரூல்ஸையும் ஃபாலோ செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











