நெருப்ப கூட தொடலாம்டா கருப்ப தொடக்கூடாது: மிரட்டும் காஞ்சனா 3 ட்ரெய்லர்
சென்னை: காஞ்சனா 3 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் காஞ்சனா 3. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காஞ்சனா 3 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ்
ட்ரெய்லரில் எனக்கு ஒன்னுனா கூட விட்டுட்டு போயிடுவேன் ஆனால் பசங்களுக்கு ஒன்னுன்னா வெட்டிட்டு தான்டா போவேன், நெருப்ப கூட தொடலாம்டா கருப்ப தொடக்கூடாது என்று பன்ச் வசனம் பேசுகிறார் ராகவா லாரன்ஸ். பேய் பட விரும்பிகளுக்கு ஃபுல் மீல்ஸ் காத்திருக்கிறது.
காஞ்சனா 3
ட்ரெய்லரில் ராகவா லாரன்ஸின் கெட்டப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் ட்ரெய்லரும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
படம்
ட்ரெய்லர் வேற லெவலில் உள்ளது. படத்திற்காக காத்திருக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
தெலுங்கு
தெலுங்கு பேசும் ரசிகர்களோ காஞ்சனா 3 ட்ரெய்லரை தங்கள் மொழியில் வெளியிடுமாறு ராகவா லாரன்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











