காஞ்சனா 4 படத்தில் பிரபலமான சீரியல் நடிகை... யார் அந்த நடிகை தெரியுமா?
சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான இத்தொடர் 2 பாகமாக ஒளிபரப்பானது. இதில், நடித்த நவீன் - ஹீமா பிந்து ஜோடியை எல்லோருக்கும் பிடித்து போனது. இதயத்தை திருடாதே தொடரில் இடம்பிடித்த சஹானா கதாபாத்திரம் பலரது மனதையும் கொள்ளையடித்தது என்றே தெரிவிக்கலாம். இதில் ஹீரோயினாக நடித்த ஹிமா பிந்து தற்போது காஞ்சனா 4 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதயத்தை திருடாதே சஹானா: இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா என்ற கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்த அடையாளம் என நடிகை ஹீமா பிந்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.தினமும் புது புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சீரியலில் இடம்பிடித்த காதல் காட்சிகளை கண்டு நானே வியந்து ரசித்திருக்கிறேன் என தெரிவித்தார். அதன் பின்னர், சன்டிவியில் ஒளிபரப்பான இலக்கியா சீரியலில் லீட் ரோலில் நடித்து பிரபலம் ஆனார் பிந்து.

காஞ்சனா 4 படத்தில் ஹீமா பிந்து: சின்னத்திரையில் அறிமுகம் ஆகும் சீரியல் நடிகைகள் சிலரும் வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆசைப்படுவது உண்டு. அதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வெற்றி பெற்ற நடிகைகளில் வாணி போஜன், பிரியா பவானி சங்கர், திவ்யா ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர். அதன் வரிசையில், தற்போது ஹீமா பிந்து இடம்பிடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தில் ஹீமா பிந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் நடிப்பதற்காக முக்கிய சீரியலில் இருந்தும் இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் போன்றே வெள்ளித்திரையில் ஜொலிக்க அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
100 கோடி பட்ஜெட்: காஞ்சனா சீரிஸ் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் ஸ்டார் நடிகைகளான பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகை நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் சீரியல் நடிகை ஹீமா பிந்து இணைந்துள்ளார். ஆனால் அவர் கதாப்பாத்திரம் குறித்த செய்திகள் வெளியாகவில்லை.
காஞ்சனா 4 படத்தினை கோல்டு மைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருவதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தொடும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இப்படமும் அதே பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீமா பிந்து கதாபாத்திரம் என்ன?: காஞ்சனாவில் திருநங்கையாக சரத்குமார் நடித்திருந்தார் அவரது கதாப்பாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டன. அதேபோன்று காஞ்சனா 2வில் நித்யா மேனன் கதாப்பாத்திரத்திற்கு பெண்களின் ஆதரவு பெருகியது. தங்களது வீட்டில் ஒரு பெண் இருப்பதை போன்றே உணர்ந்தனர். அந்த வரிசையில் காஞ்சனா 4 படத்தில் ஹீமா பிந்துவிற்கு வெயிட்டான கதாபாத்திரம் இருக்க வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ராகவா லாரன்ஸ் படத்தில் நடனம், நடிப்பும் இரண்டுமே பெரிய அளவில் பேசப்படும். ஒவ்வொரு சீரிஸிலும் கருப்பு குறித்த பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் நிறத்தை சமமாக பார்க்க இதிலும் புதுமை படைப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











