காஞ்சனா படத்தில் நடிக்காமலே இருந்து இருக்கலாம்… திருநங்கை பிரியா வேதனை!
சென்னை: காஞ்சனா படத்தில் நான் நடிக்காமலே இருந்து இருக்கலாம் என்று திருநங்கை பிரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

காஞ்சனா: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பேயை மையப்படுத்திய கதை உருவாக்கப்பட்டிருந்தது. இது வழக்கமான பேய் படம் போல் இல்லாமல் குழந்தைகளை குஷிப்படுத்தும் பேய் படம் போல இருந்ததால் காஞ்சனா திரைப்படம் வெற்றி பெற்றது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வரை திரையரங்கில் வெளிவந்து வெற்றி நடை போட்டன.
நல்ல கருத்து: காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கை படும் கஷ்டத்தையும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்ற ஒரு நல்ல கருத்து சொல்லப்பட்டு இருந்தது. இந்த கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடிகர் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு மகள் கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருந்தார்.
நான் செய்த பெரிய தவறு: இந்நிலையில், திருநங்கை பிரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரும் தவறு. காஞ்சனா படத்திற்கு முன் ஒரு நார்மலான திருநங்கை வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருந்தேன். காஞ்சனா படத்தில் நடித்ததால் கோடி கோடியாக நான் பணம் சம்பாதித்துவிட்டேன் என்று நினைக்கிறார்கள்.
கண்ணீர் பேட்டி: ஆனால், இப்படத்திற்கு பின்பு எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. வேறு வேலை எதுவும் பார்க்கவும் முடியவில்லை. நம்மை ஏற்றிவிட சிலர் பேர் இருந்தாலும், கையை பிடித்து இழுத்துவிட சிலர் இருக்கிறார்கள் என்ற திருநங்கை பிரியா கண்ணீருடன் வாழ்க்கையில் படும் கஷ்டம் குறித்து பேசி உள்ளார்.
காஞ்சனா 4: நடிகர் ராகவா லாரன்ஸ தற்போது பி வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் பணி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் காஞ்சனா பாகம் நான்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பகிறது.


Click it and Unblock the Notifications











