கண்டா வரச் சொல்லுங்க...ஐஸ்வர்யா வெளியிட்ட ரொமான்டிக் ஃபோட்டோ
சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடித்திருந்தார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். கர்ணன் படம் மட்டுமின்றி, பாடல்களும் செம ஹிட் ஆகி உள்ளன.
தனுஷ், தற்போது வெளிநாட்டிற்கு சூட்டிங்கிற்காக சென்றிருப்பதால், அங்கு குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்று கர்ணன் படத்தை பார்த்துள்ளார்.
பிறகு, கர்ணன் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பை குறிப்பிட்டு, டைரக்டர் மாரி செல்வராஜை வீடியோ காலில் அழைத்து பாராட்டி உள்ளார். இது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக மாரி செல்வராஜ் கூறி இருந்தார்.
இந்நிலையில் தனுஷின் மனைவியும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா, கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, அழகிய ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கர்ணன் படத்தின் பாடல் வரிகளுடன் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவு, ரசிக்குபடியாக உள்ளது.

அதில், "கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க" என்ற கேப்ஷனுடன், தனுஷை கட்டிபிடித்தபடி நிற்கும் ஃபோட்டோவை தான் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பாராட்டி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











