கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொல்லுங்க பாடல் காப்பியா?
சென்னை : இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர்ணன்.
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு படத்திலிருந்து முதல் பாடல் கண்டா வரச்சொல்லுங்க வெளியாகி இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாடல் காப்பி என ஒரு புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது.

முக்கியமான வேடத்தில்
இயக்குனர் பா ரஞ்சித் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் இந்த படத்தை பா ரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். கதிர் மற்றும் ஆனந்தி லீட் தொழில் நடித்திருக்க நாட்டுப்புற கலைஞர் தங்கராசு என்பவர் இதில் முக்கியமான வேடத்தில் கதிரின் அப்பாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்து இருப்பார். இன்றளவும் தமிழ்நாட்டில் நடந்தேறி வரும் சில சாதி கொடுமைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி சக்கைப் போடு போட்டு பல விருதுகளையும் இன்றுவரை குவித்து வருகிறது.

உச்சத்தைத் தொட்டது
முதல் படமே மிகத்தெளிவாக கொடுத்த மாரிசெல்வராஜுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வந்த நிலையில் இவரது இரண்டாவது படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க அதில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டது. மேலும் இந்த படத்திற்கு கர்ணன் என டைட்டில் வைக்கப்பட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து உள்ளார்.
கிடக்குழி மாரியம்மாள்
படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க இரு நாட்களுக்கு முன்பு கர்ணன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. கண்டா வரச்சொல்லுங்க என உணர்ச்சிபூர்வமான இந்த பாடலை கிடக்குழி மாரியம்மாள் என்ற நாட்டுப்புற பாடகி பாடியிருந்தார். இயக்குனர் மாரி செல்வராஜ் பாடல்வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் மிகவும் வித்தியாசமாக இருக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பாடல் காப்பி
இந்நிலையில் கண்டா வரச்சொல்லுங்க பாடல் காப்பி என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்டா வரச்சொல்லுங்க என்ற வரி தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வெளியிட்டுள்ள ஐயப்பன் பாடலில் இடம் பெற்றுள்ளது. இப்பொழுது அதே வரிகள் கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடலிலும் இடம் பெற்றிருப்பதால் இந்த பாடல் காப்பியடிக்கப்பட்டது என பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது ஒருவகையில் உண்மையும் கூட. கண்டா வரச்சொல்லுங்க பாடல் வரிகள் ஐயப்பன் பாடலில் இடம் பெற்றது தான் ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த வரிகளுக்கு சொந்தக்காரரான தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மற்றும் அந்த ஸ்டூடியோவின் பெயர்களை குறிப்பிட்டு ஸ்பெஷல் தேங்க்ஸ் மற்றும் நன்றிகளையும் தெரிவித்து அங்கீகாரம் கொடுத்துள்ளார் . இதை கவனிக்காத பலர் இந்த பாடல் காப்பி என சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











