பார்ட்டிக்கு நானும் வருவேன்.. பிரேம் என்னையும் கூட்டீட்டுப்போ.. அடம்பிடிக்கும் அப்பா கங்கை அமரன்!
சென்னை: மாநாடு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை முன்னிட்டு சரக்கு பார்ட்டி பண்ண வேண்டும் என நடிகர் பிரேம்ஜி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த பார்ட்டிக்கு தன்னையும் கூட்டீட்டுப்போ பிரேம் என மகனிடம் தந்தை கங்கை அமரன் கேட்கும் ட்வீட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
மகனிடம் ஜாலியாக உரையாடிய கங்கை அமரன் ட்வீட்டுக்கு கீழே நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஆரம்பித்த தேதியிலேயே
கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி தான் முதன் முதலாக மாநாடு படம் ஆரம்பித்தது என்றும் நடிகர் சிம்புவிடம் அது தொடர்பாக பேசிய புகைப்படத்தை வெளியிட்டு சுரேஷ் காமாட்சி, என்னவொரு அதிசயம் ஆரம்பித்த அதே தேதியிலேயே படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என ட்வீட் போட்டுள்ளார்.

பார்ட்டி பண்ணனும்
நடிகர் சிம்புவுடன் கேக் வெட்டி மாநாடு படத்தின் ஷூட்டிங் முடிந்ததை கொண்டாடிய புகைப்படங்களை சுரேஷ் காமாட்சி ஷேர் செய்ய, தனியாக அவருக்கு போன் போட்டு எனக்கு பார்ட்டி வேண்டும் என கேட்காமல், இப்படி பப்ளிக்கா, இது பார்ட்டி பண்ண வேண்டிய நேரம், நான் இல்லாமல் பார்ட்டிய ஆரம்பிச்சிடாதீங்க என ட்வீட் போட்டு ரகளை செய்துள்ளார் பிரேம்ஜி.

பார்ட்டிக்கு நானும்
மகன் பிரேம்ஜியை மிஞ்சும் அளவுக்கு தந்தை கங்கை அமரன் "பார்ட்டிக்கு நானும் வருவேன்.. பிரேம் என்னையும் கூட்டீட்டுப்போ.." என பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சில நெட்டிசன்கள் இருவரையும் கலாய்த்து கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

பெரிய குடிகாரர்கள்
ஏற்கனவே நடிகர் சிம்பு தன்னை கெடுத்ததே நடிகர் பிரேம்ஜி தான் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுத்த நிலையில், இப்படி அப்பாவும் மகனும் பப்ளிக்காவே சரக்கு பார்ட்டியை கேட்க, இருவரும் பெரிய குடிகாரர்கள் போல என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Recommended Video

சிம்புவை விடுங்க
நடிகர் சிம்பு கடந்த ஒரு வருடமாக தான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார். மீண்டும் பார்ட்டி வைத்து அவரை கெடுத்து விடவேண்டாம். சிம்புவை அப்படியே விட்டு விடுங்க என சிம்பு ரசிகர்கள் பலரும் பிரேம்ஜி மற்றும் கங்கை அமரன் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.

பார்ட்டி எப்போ
உங்க சரக்கு பார்ட்டி இருக்கட்டும், வெங்கட் பிரபு இயக்கத்தில் அத்தனை நட்சத்திர நடிகர்கள் நடித்த பார்ட்டி படம் எப்போ தான் ரிலீசாகும் என்று முதலில் சொல்லுங்கள். அட்லீஸ்ட் ஒடிடி தளத்திலாவது பார்ட்டியை வெளியிடலாமே என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











