twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாதுன்னே சொன்னாங்க...பெண் இயக்குனர் வருத்தம்

    By
    |

    Recommended Video

    Thalaivi Kangana Ranaut:தலைவிக்காக கங்கண செய்யும் காரியம்

    சென்னை: மகளுக்காக, அம்மா படிக்கப் போகும் கதையை, வேலைக்காது என்றே பலர் சொன்னார்கள், ஆனால், அதை தாண்டி கவனிக்கப்பட்டது என்றார் இயக்குனர் அஸ்வினி ஐயர்.

    தமிழில் தனுஷ் தயாரிப்பில், அமலா பால் நடித்த, அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். மும்பையை சேர்ந்த இவர், இந்தி படங்களை இயக்கி வருகிறார்.

    இவர் அடுத்து இயக்கும் படம், பங்கா. ஸ்போர்ட்ஸ் படமான இதில் கங்கனா ரனவத், கபடி வீராங்கனையாக நடிக்கிறார். ஜெஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

    இதுதான் வாழ்க்கையா?

    இதுதான் வாழ்க்கையா?

    இந்தப் படம் பற்றி அஸ்வினி ஐயர் கூறும்போது, 'இது மனித நேயத்தை வெளிப்படுத்தும் படம். வாழ்க்கை என்பதை, வேலை பார்ப்பது, திருமணம் செய்வது, குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்றே முடிவு செய்துவிட்டோம். இதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை இருப்பதை மறந்துவிட்டோம். இந்த படம் ஒரு சவாலை ஏற்றுக்கொள்வதை பற்றி பேசுகிறது. ஒரு பெண்ணின் கனவை வெற்றிகரமாக முடிக்க அவர் குடும்பம் என்ன செய்கிறது என்பது பற்றியும் சொல்கிறோம் என்கிறார் அஸ்வினி ஐயர்.

    அம்மா கணக்கு

    அம்மா கணக்கு

    என் முதல் படமான, அம்மா கணக்கு (இந்தியில், நில் பட்டே சன்னட்டா), மகளின் படிப்பை ஊக்குவிக்க அம்மாவே படிக்க செல்லும் கதையாக அமைக்கப்பட்டது. இந்தக் கதையை கேட்டுவிட்டு இதெல்லாம் ஒர்க் அவுட்டே ஆகாது என்று எச்சரித்தார்கள். ஆனால், அதையும் மீறி படம் கவனிக்கப்பட்டது என்றார் அஸ்வினி.

    கங்கனா தலையீடு

    கங்கனா தலையீடு

    இந்தப் படத்தில் கங்கனா, நடிப்பைத் தவிர வேறு எதிலும் தலையிடக் கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டால், அது தவறான தகவல். நீங்களாகவே எதையும் முடிவு செய்துவிடாதிர்கள் என்றார்.

    பிடித்துவிட்டால்...

    பிடித்துவிட்டால்...

    நானும் கங்கனாவும் கடந்த 2 வருடமாக நட்பாக பழகிவருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை. கங்கனாவுக்கு சிலரை பிடித்துவிட்டால், அவர்களை கடைசிவரை நன்றாக கவனித்துக்கொள்வார் என்பதைத் தெரிந்துகொண்டேன். இந்தப் படத்தில் நாங்கள் குடும்பல் போல இருந்தோம்' என்கிறார் அஸ்வினி.

    English summary
    After Amma kanakku, Ashwini iyer directs Banga with Kanana ranaut. she said that the film talks about the role of a family in making a person’s dream come true, she draws parallels with her own life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X